டெல்லியில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு ஆஸ்திரேலியர்
டெல்லி: டெல்லிக்கு வந்த ஆஸ்திரேலியர் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர் என்று தெரிந்த பிறகு விமான நிலையத்தோடு அவர் நாடு கடத்தப்பட்டார்.
மலேசிய வம்சாவளி ஆஸ்திரேலியர் அகமது பாஹிம் பின் ஹமத் அவாங். அவர் கடந்த வியாழக்கிழமை இரவு விமானம் மூலம் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார்.
அவர் மீது சந்தேகம் ஏற்பட்டு அவரை தனியாக அழைத்துச் சென்று பாதுகாப்பு படையினர் விசாரித்தனர். விசாரணையில் அவர் டெல்லி நிஜாமுத்தீன் பகுதியில் நடக்கும் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள வந்ததாக தெரிவித்தார். ஆனால் அவரின் பதில்கள் முன்னுக்கு பின் முரணாக இருந்தது.

அவரது லேப்டாப்பை சோதனை செய்தபோது அதில் ஜிகாதி இலக்கியம், ஐஎஸ்ஐஎஸ் கொள்கை பரப்பு கட்டுரைகள், அகமது ஆயுதங்களுடன் இருக்கும் புகைப்படங்கள் இருந்தது தெரிய வந்தது.
சில மணிநேர விசாரணைக்கு பிறகு அவர் ஆஸ்திரேலியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தனியாக வந்து தாக்குதல் நடத்தக்கூடும் என்று பாதுகாப்பு படையினர் அஞ்சும் வேளையில் அகமது டெல்லி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications