For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவுக்கு தேவை ஹிட்லரோ முசோலினியோ அல்ல- மோடி மீது ப.சி. தாக்கு

By Mathi
|

டெல்லி: இந்தியாவுக்கு தற்போதைய தேவை ஹிட்லரோ முசோலினியோ அல்ல.. அனைத்து தரப்பு மக்களாலும் ஏற்கக் கூடிய தலைவர் ஒருவரே தேவை என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

என்.டி.டிவி. தொலைக்காட்சிக்கு ப.சிதம்பரம் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

India doesn't need a Hitler or Mussolini : Chidambaram

நரேந்திர மோடியின் கொள்கைகள் அனைத்தும் பாசிசத்தை அடிப்படையாகக் கொண்டவையாக இருக்கின்றன. மக்களைப் பொறுத்தவரையில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவர்தான் இப்போது தேவை.

இந்தியாவைப் பொறுத்தவரையில் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண ஹிட்லரோ முசோலினியோ தேவையில்லை. அதேபோல் இந்தியாவின் பிரச்சனைக்கு தீர்வு காண 56 இஞ்ச் மார்பளவு கொண்டவர்களும் தேவையில்லை.

நரேந்திர மோடியைப் பொறுத்தவரையில் ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார். அவரால் எப்படி இவற்றை நிறைவேற்ற முடியும்?

இவ்வாறு ப.சிதம்பரம் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

English summary
Union Minister P. Chidambaram said that, India doesn't need a Hitler or Mussolini to solve its problems' in NDTV interview.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X