தெற்கு சூடானில் இருந்து இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற மத்திய அரசு நடவடிக்கை
டெல்லி: தெற்கு சூடானில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு தங்கியிருக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தெற்கு சூடானில் ராணுவத்திற்கும், புரட்சிப்படைக்கும் இடையேயான உள்நாட்டுப் போர் மிக தீவிரமடைந்துள்ளது. போரின் காரணமாக, பாதுகாப்பு முகாம்களில் 45,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தலைநகர் ஜூமாவிலும், போர் மற்றும் பெண்டியு ஆகிய நகரங்களிலும் இந்த முகாம்கள் செயல்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தெற்கு சூடானில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளதால், அங்கு தங்கியுள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு இந்திய வெளியுறவுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. இதனை வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதின் உறுதிபடுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, "ஏற்கனவே பெரும்பாலான மக்கள், விமானங்கள் மூலமும், தரை வழிப் போக்குவரத்தின் மூலமாகவும் நாடு திரும்பியுள்ள நிலையில், மீதமுள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் "என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications