இந்தியாவில் 1,866 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் இருக்குன்னு தெரியுமா?
டெல்லி: இந்தியாவில் 1, 866 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் 24ம் தேதி நிலவரப்படி இந்தியாவில் 1,866 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதில் 56 கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அல்லது மாநில கட்சிகள் ஆகும். மீதமுள்ளவை அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகள் ஆகும்.

கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலின்போது 464 கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்தன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 10ம் தேதி வரை நாட்டில் 1, 593 அரசியல் கட்சிகள் இருந்தன. இந்நிலையில் கடந்த மார்ச் 11 முதல் 21ம் தேதி வரை புதிதாக 24 கட்சிகள் பதிவு செய்யப்பட்டன. மார்ச் 26ம் தேதி மேலும் 10 கட்சிகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த மார்ச் மாதம் வரை இந்தியாவில் மொத்தம் 1,627 அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்ட கட்சிகளாக இருந்தன.
கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஜூலை வரை 239 புதிய கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டன. இந்த அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் தங்களுக்கு பிடித்த சின்னத்தில் தேர்தலில் போட்டியிட முடியாது.
அவை தேர்தல் ஆணையம் அளிக்கும் சின்னங்களில் எதையாவது தேர்வு செய்து தான் போட்டியிட வேண்டும். ஏ.சி., பலூன், செருப்பு, தேங்காய், ஜன்னல், பாட்டில் என அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்காக 84 சின்னங்களை அளித்துள்ளது தேர்தல் ஆணையம்.












Click it and Unblock the Notifications