இந்தியாவில் 70 பெரும் கோடீஸ்வரர்கள்: நம்பர் ஒன் பணக்காரர் முகேஷ் அம்பானி
டெல்லி: இந்தியாவில் 70 பெரும் கோடீஸ்வரர்கள் உள்ளார்களாம். அதில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தான் பணக்கார இந்தியராம்.
சீனாவை சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹுருன் 2014ம் ஆண்டிற்கான உலக பணக்காரர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை தயாரித்து வெளியிட்டுள்ளது.
அந்த பட்டியலில் யார், யார் எந்தெந்த இடத்தில் உள்ளனர் என்று பார்ப்போம்.

பில் கேட்ஸ்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸ் 68 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களுடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

வாரன் பஃபெட்
பெர்க்ஷயர் ஹாத்தவேயின் வாரன் பஃபெட் 64 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலகின் இரண்டாவது பணக்காரராக உள்ளார்.

முகேஷ் அம்பானி
உலக பணக்காரர்கள் பட்டியலில் 18 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள சொத்துக்கள் வைத்திருக்கும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானிக்கு 41வது இடம் கிடைத்துள்ளது. ஆனால் அவர் தான் பணக்கார இந்தியர் ஆவார்.

மிட்டல், பிரேம்ஜி
உலக பணக்காரர்கள் பட்டியலில் லக்ஷ்மி மிட்டல் 49வது இடத்திலும், சன் பார்மசுட்டிகல்ஸின் திலிப் சங்வி மற்றும் விப்ரோவின் ஆசிம் பிரேம்ஜி ஆகியோர் 77வது இடத்திலும், டாடா சன்ஸின் பலோன்ஜி மிஸ்ட்ரி மற்றும் எஸ்.பி. இந்துஜா அன்ட் பேமிலி 93வது இடத்திலும் உள்ளனர்.

இந்தியா
70 பெரும் கோடீஸ்வரர்களுடன் இந்தியா 5வது பணக்கார நாடாக உள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில் 53 பெரும் கோடீஸ்வரர்கள் இருந்தனர். இந்த எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications