24 மணிநேரமும் மின்சார சேவை இலக்கில் பயணிக்கும் மத்திய அரசு!
இந்தியாவின் மின் தேவையை பூர்த்தி செய்து 24 மணி நேரமும் வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் வழங்கும் இலக்கை மத்திய அரசு விரைவில் எட்டவுள்ளது. அந்தப் பயணத்தில் இந்திய அரசு விரைந்து செல்வதாக ஆய்வு முடிவுகள்
டெல்லி: இந்தியாவின் ஒட்டுமொத்த மின்சார தேவையை பூர்த்தி செய்ய மத்திய அரசு தீவிரமாக நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில், ஒட்டுமொத்த மின்தேவையை 24 மணி நேரமும் பூர்த்தி செய்யும் இலக்கை இந்தியா அடையவுள்ளது என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
இந்தியாவின் மிக அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக இருப்பது மின்சாரம். இன்றளவும் இந்தியாவின் கடைக்கோடி கிராமங்கள் அல்லது மலைக்கிராமங்கள் மின்வசதியில்லாமல் உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.

இந்தநிலையை மாற்ற பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு முன்மாதிரி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான ஆய்வில், இன்னும் சில மாநாடுகளில் 24 மணிநேரமும் மின்சார சேவை வழங்கும் நாடாக இந்திய வளர்ச்சி அடையும் என்று தெரிய வந்துள்ளது.
அந்த தேசிய சர்வேயில், 41 விழுக்காடு மக்கள், மின்சார விநியோகம் ஓரளவுக்கு வளர்நதுள்ளது என்றும், 15 விழுக்காடு மக்கள் கடந்த ஆண்டைவிட இப்போது மின் விநியோகம் வளர்ந்துள்ளது என்று பதிவு செய்துள்ளனர்.
மத்திய அரசின் மின்துறை சார்பில் நடைமுறையில் உள்ள 'URBAN JYOTI ABHIYAAN' என்ற ஆப் மூலம் மின் நுகர்வோர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். அதில் கிடைத்த கருத்துக்கள் அடிப்படையில் சர்வே முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்த ஆண்டு ஜூலை வரை, இந்தியா முழுக்க 'பவர் கட்' மாதத்திற்கு 9.21 மணி நேரமாக குறைந்துள்ளது என்று சர்வேயில் தெரியவந்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில், மாத பவர் கட் நேரம் 16.33 மணிநேரமாக இருந்துள்ளது கவனிக்கத்தக்கது.
மேலும் மத்திய அரசின்சார்பில், மின்சார சேவை பற்றிய தகவல்களை அறிந்துகொள்ளவும், www.urjaindia.co.in என்ற இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும்,1800 200 3004 -எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுத்ததும் வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ளலாம்.
அதே போல மின் சேவையில் புகார்கள் இருந்தால் 1912 எண்ணுக்கு போன் மூலம் புகார் செய்யலாம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மிக விரைவில் மின் பற்றாக்குறை இல்லாத நாடாக மாறும் என்று தேசிய ஆய்வு கூறுகிறது.
-
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு












Click it and Unblock the Notifications