தனி நபரிடம் குவிந்து கிடக்கும் சொத்துகள்... உலகின் பணக்கார நாடு பட்டியலில் இந்தியாவிற்கு 6வது இடம்!
உலகின் 6-வது பணக்கார நாடு இந்தியா என்று நியூ வோர்ல்ட் வெல்த் ஆய்வின் தகவல் கூறுகிறது.
டெல்லி: தனி நபரின் சொத்து, நிதி ஆதாரங்கள் அடிப்படையில் உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் உலக பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியா 6வது இடத்தில் உள்ளது. தனி நபர்களிடம் உள்ள மொத்த சொத்து மதிப்பு 8,230 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.
உலக பணக்கார நாடுகள் ஆய்வுப் பட்டியலை நியூ வோர்ல்ட் வெல்த் ஆய்வு (New World Wealth) நிறுவனம் வெளியிட்டுள்ளது. தனிநபர் சொத்து, நிதி ஆதாரம், பங்குகள், நிறுவனங்களின் வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்வின் முடிவில் இந்தியாவின் பணக்கார நாடு பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்க பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு 64,584 பில்லியன் டாலர் என்றும், அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் சீனா நாட்டை சேர்ந்த பணக்காரர்கள் 24,803 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து வைத்திருப்பதாகவும் ஆய்வு கூறுகிறது.

ஜப்பானுக்கு 3வது இடம்
அமெரிக்கா, சீனாவைத் தொடர்ந்து ஜப்பான் அடுத்த இடத்தில் இருக்கிறது. 19,522 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துடன் ஜப்பான் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

6வது இடத்தில் இந்தியா
பிரிட்டன் 9,919 பில்லியன் டாலர்களுடன் 4-வது இடத்தைப் பெறுகிறது. ஜெர்மனி 9,660 பில்லியன் டாலர்களுடன் 5-வது இடத்தில் உள்ளது. பிரான்ஸ் இந்தியாவுக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளது. இந்த நாட்டின் சொத்து மதிப்பு 6,649 பில்லியன் டாலர்கள். அடுத்தடுத்த இடங்களை கனடா, ஆஸ்திரேலியா, இத்தாலி நாடுகள் பெற்றுள்ளன.

67 சதவிகித சொத்து 1% பணக்காரர்களிடம்
இந்தியாவின் 67 சதவிகித சொத்து ஒரு சதவிகித இந்தியர்கள் வசமே உள்ளது என்பது ஆய்வு கூறும் அதிர்ச்சித் தகவல். அதாவது பொருளாதார வளர்ச்சிக்கேற்ப பணக்காரர்களின் சொத்துகள் மட்டுமே அதிகரிக்கிறது என்பது தான் இதன் அர்த்தம்.

10 ஆண்டில் அசூர வளர்ச்சி
2017-ம் ஆண்டு இந்தியாவின் சொத்து மதிப்பு 25 சதவிகிதம் வளர்ச்சிக் கண்டுள்ளது. 2016-ம் ஆண்டு இந்தியாவின் சொத்து மதிப்பு 6,584 கோடி அமெரிக்க டாலர்களாக இருந்தது. ஒரே ஆண்டில் 8,230 கோடியாக உயர்ந்துள்ளது. 2007-ம் ஆண்டு இந்தியாவின் சொத்து மதிப்பு 3,165 பில்லியன் டாலர்களாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பணக்காரர்களின் சொத்து 160 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா!












Click it and Unblock the Notifications