பாகிஸ்தானுக்கு ஆதரவா? மலேசியா, துருக்கியை பகைக்கும் இந்தியா.. உறவில் ஏற்படும் பெரும் விரிசல்!
எஃப்ஏடிஎஃப் (FATF) ஆலோசனையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக வாக்களித்த காரணத்தால் மலேசியா மற்றும் துருக்கி மீது இந்தியா கடும் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video
டெல்லி: எஃப்ஏடிஎஃப் (FATF) ஆலோசனையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக வாக்களித்த காரணத்தால் மலேசியா மற்றும் துருக்கி மீது இந்தியா கடும் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் இந்தியா இடையிலான மோதல் போக்கு தற்போது ஆசியா கண்டத்தில் பெரிய பிரச்சனையாக உருவெடுக்க தொடங்கி உள்ளது. இந்த பிரச்சனையில் தற்போது சீனா, துருக்கி, மலேசியா போன்ற நாடுகள் தலை நீட்ட தொடங்கி உள்ளது.
சர்வதேச அமைப்பான எஃப்ஏடிஎஃப் (பினான்சியல் ஆக்சன் டாஸ்க் போர்ஸ் - Financial Action Task Force - FATF) தீவிரவாத குற்றங்கள், அது தொடர்பான பொருளாதார குற்றங்கள், பண மோசடிகள் குறித்து விசாரிக்கும் அமைப்பாகும். தீவிரவாதிகளுக்கு எப்படி பணம் கிடைக்கிறது என்பதை இந்த அமைப்பு தீவிரமாக கண்காணிக்கும்.

என்ன கண்டிப்பு
கடந்த சில தினங்களுக்கு முன், தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று சர்வதேச அமைப்பான எஃப்ஏடிஎஃப் (FATF) கண்டித்தது. இதனால் பாகிஸ்தான் பிளாக் லிஸ்ட் செய்யப்படுகிறதா என்று கேள்வி எழுந்தது. தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாடுகளை எஃப்ஏடிஎஃப் பிளாக் லிஸ்ட் செய்வது வழக்கம். இந்த அமைப்புதான் உலகில் உள்ள நாடுகளை தரம் பிரிக்கும்.

வாக்கு எடுப்பு
தீவிரவாத அமைப்புகள் எளிதாக பொருளாதார உதவிகளை பெறுவதாக கூறி கடந்த வருடம் ஜூன் மாதம் பாகிஸ்தானை எஃப்ஏடிஎஃப் கிரே லிஸ்ட் செய்தது. ஆனால் இதற்கு பின்பும் கூட பாகிஸ்தான் தனது நாட்டில் உள்ள தீவிரவாத அமைப்புகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பாகிஸ்தானுக்கு பிளாக் லிஸ்ட் கொடுக்கலாமா என்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த வாக்கெடுப்பு நடந்தது.

எதுவும் இல்லை
ஆனால் இதில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா, துருக்கி, மலேசியா ஆகிய நாடுகள் வாக்களித்தது. பாகிஸ்தானுக்கு பிளாக் லிஸ்ட் கொடுக்க கூடாது. அந்த நாட்டை தடை செய்ய கூடாது என்று மூன்று நாடுகளும் வாக்களித்தது. இதனால் பாகிஸ்தான் எஃப்ஏடிஎஃப் நடவடிக்கையில் இருந்து தப்பித்தது.

கோபம்
இதையடுத்து தற்போது துருக்கி மற்றும் மலேசியா மீது இந்தியா கோபத்தில் இருக்கிறது. இதனால் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தாவர எண்ணெய் உட்பட பல்வேறு பொருட்களுக்கு 5% கூடுதலாக சுங்க வரி விதிக்கப்பட்டுள்ளது. விரைவில் மொத்தமாக இந்தியா மலேசியாவிடம் இருந்து பால்ம் ஆயில் வாங்குவதை நிறுத்திவிடும் என்று கூறுகிறார்கள்.

மலேசியா அச்சம்
உலகிலேயே அதிகமாக எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முக்கியமான இடத்தில் இருக்கிறது. மலேசியா இதனால் பெரிய அளவில் இந்தியாவை நம்பி இருக்கிறது. இந்த நிலையில் இந்தியா இப்படி ஒரு முடிவை எடுக்க இருப்பது மலேசியாவிற்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

துருக்கி எதிர்ப்பு
அதேபோல் துருக்கிக்கு எதிராகவும் இந்தியா நடவடிக்கை எடுக்க தொடங்கி உள்ளது. துருக்கியின் பாதுகாப்பு துறை நிறுவனமான அனடோலு ஷிப் யார்டு நிறுவனத்துடன் ஏற்கனவே இந்தியா உறவை முறித்துக் கொண்டது. இன்னும் சில துருக்கி நிறுவனங்களுடன் மொத்தமாக இந்தியா உறவை முறிக்க உள்ளது என்றும் கூறுகிறார்கள்.

போர் எப்படி
சிரியா மீது துருக்கி தாக்குதல் நடத்துவதற்கும் இந்தியா எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கி உள்ளது. சிரியாவில் உள்ள குர்து படைகள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானை காரணம் காட்டி துருக்கியை இந்த பிரச்சனையில் இந்தியா எதிர்க்க தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications