இந்தியா - பாக்., பாதுகாப்பு படை இயக்குநர்கள் இடையேயான பேச்சுவார்த்தை - டெல்லியில் நடக்கிறது!
டெல்லி: இந்தியா - பாகிஸ்தான் நாடுகளின் எல்லை பாதுகாப்பு படை இயக்குநர்கள் இடையிலான பேச்சுவார்த்தை இன்று டெல்லியில் நடைபெறுகிறது.
இந்திய எல்லைகளில் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் எல்லைப் பகுதியில் பதற்றமான சூழலே நிலவுகிறது.
இந்நிலையில், கடந்த மாத இறுதியில் இரு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் டெல்லியில் சந்தித்து பேச திட்டமிடப்பட்டது. ஆனால், காஷ்மீர் பிரிவினைவாதிகள் தொடர்பான சர்ச்சையால் கடைசி நேரத்தில் பேச்சு ரத்து செய்யப் பட்டது.

இந்நிலையில், இரு நாடுகளின் பாதுகாப்பு படைகளுக்கான பொது இயக்குனர்கள் இடையில், இன்று டெல்லியில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
இதற்காக பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படை பொது இயக்குனர் மேஜர் ஜெனரல் உமர் பரூக் பர்கி தலைமையில், 16 பேர் கொண்ட குழுவினர் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசுக்கு வாகா எல்லை வழியாக வந்தனர். பின்னர் அவர்கள், சிறப்பு விமானம் மூலம் டெல்லி அழைத்து செல்லப்பட்டனர்.
இதேபோல், இந்திய தரப்பில் எல்லை பாதுகாப்பு படை பொது இயக்குனர் தலைமையில், 23 பேர் கொண்ட குழு இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கிறது.
இந்த பேச்சுவார்த்தையின் போது, எல்லையில் தொடரும் பாகிஸ்தானின் அத்துமீறல்கள், குர்தாஸ்பூர், உதம்பூர் தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள், பாகிஸ்தான் தீவிரவாதி இந்தியாவில் கைது செய்யப்பட்டது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இந்திய தரப்பில் எழுப்பப்பட உள்ளது. பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவது, போதை மருந்து கடத்தல் உள்ளிட்டவைகள் குறித்து இந்தியா கேள்விகளை எழுப்பும் எனத் தெரிகிறது. அதேபோன்று, இந்திய ஆளில்லா விமான பாகிஸ்தான் பகுதியில் விழுந்தது உள்ளிட்டவைகள் குறித்து பாகிஸ்தான் தரப்பில் பேச திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் இதுபோன்ற கூட்டம் 2013 டிசம்பரில், பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில் நடைபெற்றது.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications