தீபாவளி கொண்டாட்டம்.. வாகா எல்லையில் இந்திய- பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இனிப்பு பரிமாற்றம்
அமிர்தசரஸ்: தீபாவளி பண்டிகையையொட்டி இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியான வாகா எல்லைக்கோடு அருகே இருநாட்டு வீரர்களும் இனிப்புகளை பரிமாறி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.
பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தானையொட்டி அமைந்துள்ள வாகா எல்லைப் பகுதியில் முக்கிய பண்டிகைகளின் போது இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் இனிப்புகளையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொள்வது வழக்கம்.

காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வந்ததால் கடந்த ஆண்டு தீபாவளித் திருநாளன்று எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களுக்கு இனிப்பு வழங்கவில்லை.
அதேபோல் இந்த ஆண்டும் கடந்த சில நாட்களுக்கு முன்பு எல்லைப் பகுதியில் இந்திய நிலைகளின் மீது அவ்வப்போது தாக்குதல்களும், தொடர் அத்துமீறல்களும் நடைபெற்றது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.
இதனால் இந்த ஆண்டும் தீபாவளிக்கு இனிப்புகள் வழங்கப்படுமா என்ற சந்தேகம் நிலவி வந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான வாகா எல்லைக் கோடு அருகே எல்லைப் பாதுகாப்புப் படை டிஐஜி டெபி ஜோசப், பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் விங் கமாண்டர் முகமது அசீர் கானுக்கு இந்திய பாரம்பரிய இனிப்புகளை வழங்கி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். அதனைத் தொடர்ந்து இந்திய பாதுகாப்பு படை வீரர்களும் இனிப்புகளை பரிமாறி பாகிஸ்தான் வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications