இந்தியா- பாக். வெளியுறவுத் துறை செயலர் இடையேயான நாளைய பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு!
டெல்லி: இந்தியா- பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலாளர்கள் இடையேயான நாளைய பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி திடீரென பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து நாளை ஜனவரி 15-ந் தேதியன்று இருநாட்டு வெளியுறவுத் துறை செயலாளர்களிடையேயான பேச்சுவார்த்தை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பதன்கோட் விமானப் படை மீது பாகிஸ்தானில் இருந்து எல்லை தாண்டி ஊடுருவிய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 7 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர்.

இதனால் இருநாடுகளிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இத்தாக்குதலைத் தொடர்ந்து வெளியுறவுத் துறை செயலாளர்கள் இடையேயான பேச்சுவார்த்தை நடைபெறுமா என்பது கேள்விக்குறியானது.
இந்த சூழலில், பதன்கோட் தாக்குதலின் சூத்ரதாரியாக கருதப்படும் ஜெய்ஷ்- இ முகமது இயக்கத்தின் தலைவர் மவுலானா மசூத் அஸாரை பாகிஸ்தான் கைது செய்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இருப்பினும் இது குறித்த தகவல்கள் குழப்பமானதாக இருந்து வருகிறது.
இதனால் இந்தியா- பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலாளர்கள் இடையேயான நாளைய பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பதன்கோட் விவகாரத்தில் பாகிஸ்தான் மேற்கொள்ளும் அடுத்த கட்ட நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே இப்பேச்சுவார்த்தையும் இருக்கக் கூடும்.
தற்போது பாரீஸில் உள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நாடு திரும்பிய பின்னரே பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலருடனான பேச்சுவார்த்தை குறித்து இறுதி முடிவெடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications