மலேசிய அரசின் கோரிக்கைப்படி விமானத்தை தேடும் பணியை நிறுத்திய இந்தியா
டெல்லி: மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியை இந்தியா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாயமான மலேசிய விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது வலுத்துள்ளது. இதையடுத்து விமானத்தை தேடும் பணியை நிறுத்துமாறு மலேசிய அரசு இந்தியாவை கேட்டுக் கொண்டது.

மலேசிய அரசின் வேண்டுகோளை ஏற்று அந்தமான், நிக்கோபார் தீவுகள் மற்றும் வங்காள விரிகுடாவின் தெற்குப் பகுதியில் தேடுதல் பணியை இந்தியா நிறுத்தியுள்ளது. ஆனால் தேடுதல் பணி தற்காலிகமாவே நிறுத்தப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கிழக்கு கடற்படை செய்தித் தொடர்பாளர் கமாண்டர் பாபு கூறுகையில்,
தேடுதல் பணி தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டுள்ளது. மலேசிய அதிகாரிகள் சூழ்நிலையை மறுஆய்வு செய்து வருகின்றனர். தேடுதல் பகுதியை மாற்ற வேண்டுமா என்பதை அவர்கள் தான் கண்டறிந்து கூறுவார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications