மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா 2ம் இடத்திற்கு முன்னேற்றம்.. மோடியை கிண்டல் செய்யும் காங்கிரஸ்

மோடி ஆட்சிக்கு வந்த பின்புதான் அதிக அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்படுவதாக காங்கிரஸ் கட்சி ஆதாரங்களை வெளியிட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: மோடி ஆட்சிக்கு வந்த பின்புதான் அதிக அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்படுவதாக காங்கிரஸ் கட்சி ஆதாரங்களை வெளியிட்டுள்ளது.

கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் தற்போது சூடுபிடித்து இருக்கிறது. வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் கர்நாடகாவில் பிரச்சார கூட்டம் ஒன்றில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாட்டிறைச்சி அரசியல் குறித்து பேசினார். பாஜக இதில் எப்படி இரட்டை வேடம் போடுகிறது என்று அவர் ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.

தடை செய்வோம்

தடை செய்வோம்

கர்நாடக மாநில தேர்தலுக்காக சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடியும், உத்தர பிரதேச முதல்வர் யோகியும் கர்நாடகா வந்திருந்தார்கள். அப்போது பாஜக ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக மாட்டிறைச்சி விற்பனையை தடை செய்வோம், மாட்டிறைச்சி விற்பவர்களை கைது செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்து இருந்தார்கள். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

காங்கிரஸ் பதிலடி

காங்கிரஸ் பதிலடி

இதற்கு பதில் அளித்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் ராமலிங்க ரெட்டி ''பசுக்கள் மீது பாஜக பொய்யான அன்பை காட்டுகிறது. மாட்டிறைச்சியை தடை செய்த பாஜக இன்னும் மாட்டிறைச்சி ஏற்றுமதியை தடை செய்யவில்லை. மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சர்வதேச அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா 3ம் இடத்தில் இருந்தது, இப்போது 2ம் இடத்தில் இருக்கிறது'' என்றுள்ளார்.

வருமானம்

வருமானம்

மேலும் ''பாஜகவிற்கு பசுக்கள் மீது பக்தி எல்லாம் இல்லை. அவர்களுக்கு வருமானம் மட்டுமே முக்கியம். கடந்த 2015-2016ல் மட்டும் ரூபாய் 26,682 கோடிக்கு மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. மோடிக்கு பசுக்களை விட அதை கொலை செய்து வரும் ரூபாய் 26,682 கோடி தான் முக்கியம். அதனால்தான் இந்தியா இரண்டாம் இடத்திற்கு முன்னேறி இருக்கிறது '' என்றுள்ளார்.

பாஜக ஆளும் மாநிலம்

பாஜக ஆளும் மாநிலம்

முக்கியமாக ''பாஜக ஆளும் மாநிலங்களில்தான் அதிக அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்படுகிறது. மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தான் அதிக மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனங்கள் இருக்கிறது. கோவாவில்தான் மக்கள் தினமும் 30-50 டன் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள்'' என்று புள்ளிவிவரங்களை வெளியிட்டு இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+