லோக்சபா தேர்தலில் காங்.குக்கு பெரும் அடி.- பாஜக வெல்லும்- என்டிடிவி கருத்துக் கணிப்பு
டெல்லி: என்டிடிவி நடத்திய கருத்துக் கணிப்பு ஒன்றில் நாடு முழுவதும் நரேந்திர மோடி அலை வீசுவதாகவும்,பாஜகவுக்கு பெரும் வெற்றி கிடைக்கும் என்றும், காங்கிரஸுக்கு பேரடி விழும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகாரில் இந்த முறை பாஜகவுக்கு பெரும் லாபம் கிடைக்கும் என்றும், கர்நாடகா, ராஜஸ்தானில் அக்கட்சி பெரும் வெற்றியை ஈட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 350 தொகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு 166 இடங்களும், காங்கிரஸுக்கு 52 இடங்களும், பிறருக்கு 85 இடங்களும், மாற்று அணியினருக்கு 16 இடங்களும் கிடைக்கும் என்றும் இந்தக் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

2 லட்சம் பேரிடம்
நாடு முழுவதும் 350 தொகுதிகளில் 2 லட்சம் பேரிடம் கருத்துக்களைக் கேட்டு முடிவை வெளியிட்டுள்ளது என்டிடிவி.

பீகாரில் பாஜகவுக்கு உயர்வு
பீகாரில் கடந்த சட்டசபைத் தேர்தலில் மோடியை முற்றிலும் புறக்கணித்திருந்தார் முதல்வர் நிதீஷ் குமார். ஆனால் இந்த முறை. அங்கு பாஜகவுக்கு வாக்காளர்கள் பெரும் ஆதரவு கொடுக்கவுள்ளதாக கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

ராஜஸ்தான்- ம.பியில் பாஜக ஸ்டிராங்
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் பாஜக வலுவான நிலையில் உள்ளதாம். அங்கு அது பெரும் வெற்றியை ஈட்டும், ஸ்வீப் செய்யும் என்றும் கருத்துக் கணிப்பு கூறுகிறது.

12 மாநிலங்களில்
மொத்தம் 12 மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த கருத்துக் கணிப்பில் 319 இடங்கள் யாருக்குக் கிடைக்கும் என்பதை என்டிடிவி கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.

பாஜக கூட்டணிக்கு 166 இடங்கள்
இதில் 166 இடங்களை பாஜக கூட்டணி கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸுக்கு 52
காங்கிரஸ் கூட்டணிக்கு 52 இடங்களே கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பு கூறுகிறது.

டெல்லியில் ஆம் ஆத்மி அலை
டெல்லியில் தொடர்ந்து ஆம் ஆத்மி அலையே வீசுகிறது. அங்குள்ள மொத்தம் 7 இடங்களில் கெஜ்ரிவால் கட்சிக்கு 4 இடங்கள் கிடைக்குமாம். பாஜகவுக்கு 2 இடமும், காங்கிரஸுக்கு இங்கு பெரும் தோல்வி கிடைக்குமாம்.

ஹரியானாவில் ஹரியானா விகாஸ் கட்சி
ஹரியானாவில் ஹரியானா விகாஸ் கட்சிக்கு 7 இடங்களும், காங்கிரஸுக்கு 3 இடங்களும் கிடைக்குமாம். இங்கு குறி வைத்திருக்கும் ஆம் ஆத்மிக்கு நல்ல அடி கிடைக்குமாம்.
-
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
“அதிகப் பிரசங்கித்தனம்”.. காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி பதிவால் டென்ஷன் ஆன சிபிஐஎம்! -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார்












Click it and Unblock the Notifications