இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட அதிநவீன தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட்- 15
பெங்களூர்: தொலைத்தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட் 15 தென்னமெரிக்காவில் உள்ள பிரெஞ்ச் கயானாவில் இருந்து இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்தியாவின் அதிநவீன தொலைத்தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட் 15 தென் அமெரிக்காவில் உள்ள பிரெஞ்ச் கயானாவில் இருந்து இன்று அதிகாலை 3.04 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. செயற்கைக்கோள் ஏரியன் 5 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதை இன்று காலை 5.33 மணிக்கு இஸ்ரோ ட்விட்டர் மூலம் அறிவித்தது. 3 ஆயிரத்து 164 கிலோ எடை உள்ள செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 12 ஆண்டுகள் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
11 மணிநேரம் 30 நிமிட கவுன்ட் டவுனிற்கு பிறகு செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் ஏவப்பட்ட பிறகு 43 நிமிடங்கள் 24 நொடிகளில் செயற்கைக்கோள் ராக்கெட்டில் இருந்து பிரிந்து சென்றது.

அதன் பிறகு கர்நாடக மாநிலம் ஹாஸனில் உள்ள இஸ்ரோ நிறுவன கட்டுப்பாட்டு அமைப்பு செயற்கைக்கோளின் கட்டுப்பாட்டை பெற்றது. ஜிசாட் 17 மற்றும் ஜிசாட் 18 செயற்கைக்கோள்களும் ஏரியன் ராக்கெட்டுகள் மூலம் பிரெஞ்ச் கயானாவில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளன.
தலா 3 ஆயிரத்து 40 கிலோ எடை கொண்ட அந்த செயற்கைக்கோள்கள் 2016 மற்றும் 2017ம் ஆண்டில் விண்ணில் ஏவப்படும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications