Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்.. "ஜில்லுன்னு" காபியுடன்...இணையத்தை கலக்கும் இக்லு காஃபே!

Subscribe to Oneindia Tamil

ஜம்மு : காஷ்மீரில் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக இக்லு காஃபே அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான செய்திகளும், போட்டோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கியதால் கடுமையாக பாதிக்கப்பட்டது , சுற்றுலாத்துறை தான். ஓட்டல்கள், ரெஸ்டாரென்ட்கள் தற்போது மெதுவாக திறக்கப்பட்டு, இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. இதனால் வாடிக்கையாளர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் கவருவதற்காக புதுமையாக, வித்தியாசமாக என்ன செய்யலாம் என ஓட்டல் உரிமையாளர்கள் போட்டி போட்டிக் கொண்டு யோசித்து வருகின்றனர்.

Indias First Igloo Cafe Opens In Kashmir And Twitter Is Loving It

அந்த வரிசையில் காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் உள்ள Kolahoi Ski ரிசார்ட்டில் புதுமையான ஏற்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. அப்படி என்ன புதுமை என கேட்கிறீர்களா...அது தான் இக்லு காஃபே. இந்த ரிசார்ட்டில் இக்லு வடிவில் பனிக்கட்டிகளை கொண்டு காஃபே வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு நாற்காலி, மேஜை என அனைத்தும் பனிக்கட்டியால் தான் செய்யப்பட்டுள்ளது.

சுற்றிலும் குளுமை நிறைந்த இந்த காஃபேயில் வாடிக்கையாளர்களுக்கு சுடசுட உணவுகள் பரிமாறப்படுகிறது. 15 அடி உயரமும், 26 அடி சுற்றமும் கொண்ட இந்த புதிய ரெஸ்டாரன்டில் 4 டேபிள்கள் மட்டுமே போடப்பட்டுள்ளது. ஒரு நேரத்தில் 16 பேர் மட்டுமே அமர்ந்து சாப்பிட முடியும். இந்தியாவின் முதல் இக்லு காஃபே என்ற பெருமையும் இந்த ரெஸ்டாரென்டிற்கு கிடைத்துள்ளது.

Indias First Igloo Cafe Opens In Kashmir And Twitter Is Loving It

தனித்துவத்துடன் அமைக்கப்பட்டுள்ள இந்த காஃபே, தற்போது வேகமாக இணையத்தில் பிரபலமாகி வருகிறது. வாடிக்கையாளர்கள் பலரும் இங்கு வந்து சென்ற அனுபவத்தையும், தங்கள் கருத்துக்களையும் போட்டோவுடன் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ள சமூக வலைதள பக்கங்களிலும் பதிவிட்டு வருகின்றனர். மற்றவர்களையும் இங்கு வர பரிந்துரை செய்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+