வரலாற்றில் முதல்முறை.. இந்திய விமானப்படையில் போர் விமான பைலட்டுகளாக 3 பெண்கள் நியமனம்
ஹைதராபாத்: இந்திய விமானப்படை வரலாற்றில் முதல்முறையாக போர் விமானங்களை இயக்குவதற்கு 3 பெண் பைலட்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்று விமானப்படையில் பணியை துவக்கிய இவர்கள் உள்பட பயிற்சி முடித்த வீரர்களின் அணிவகுப்பை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பரிக்கர் பார்வையிட்டார்.
இந்திய விமான படையில் பெண்கள் ஏற்கனவே இடம்பெற்றிருந்தாலும் போர் விமானங்களை இயக்கும் பணியில் ஆண் பைலட்களே ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். சமீபகாலமாக, பெண் பைலட்களும், போர் விமானங்களை இயக்கும் பயிற்சி பெற்று வந்தனர். இதில் பயிற்சி முடித்த பீகாரைச் சேர்ந்த பாவனா கந்த், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அவானி சதுர்வேதி, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மோகனா சிங் ஆகிய மூன்று பெண் பைலட்களும் விமானப்படையில் இன்று தங்கள் பணியில் சேர்ந்தனர்.

இவர்கள் 3 பேருக்கும் இங்கிலாந்து நாட்டின் தயாரிப்பான ஹாக் போர் விமானத்தை இயக்குவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமான படையில் பெண் பைலட்களை சேர்ப்பதென மத்திய அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முடிவு செய்து அறிவித்தது. ஐதராபாத் துண்டிக்கல் விமான படை தளத்தில் விமானப் படை பயிற்சி முடித்த இளம் வீரர்களின் அணிவகுப்பு இன்று காலை நடைபெற்றது. இதில் மூன்று பெண் பைலட்களும் இடம் பெற்றனர். மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பரிக்கர் கலந்து கொண்டு அணிவகுப்பை பார்வையிட்டார்.
பெண் பைலட் மோகனாவின் தந்தை விமானப் படையில் அதிகாரியாக உள்ளார். அவரது தாத்தாவும் விமானப் படையில் பணி புரிந்தவர். பாவனாவின் தந்தை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். அவானியின் தந்தை மத்திய பிரதேச அரசில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.
India's first women fighter pilots - Bhawana Kanth, Avani Chatuvedi and Mohana Singh - were commissioned in the Indian Air Force today.
இந்திய விமானப்படை வரலாற்றில் முதல்முறையாக போர் விமானங்களை இயக்குவதற்கு 3 பெண் பைலட்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்று விமானப்படையில் பணியை துவக்கிய இவர்கள் உள்பட பயிற்சி முடித்த வீரர்களின் அணிவகுப்பை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பரிக்கர் பார்வையிட்டார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications