இந்தியாவின் அதிவேக ‘பிரமோஸ் சூப்பர்சோனிக்’ ஏவுகணை சோதனை வெற்றி
சண்டிப்பூர்: இந்தியாவின் அதிவேக 'பிரமோஸ் சூப்பர்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது.
இந்தியா - ரஷியா கூட்டு தயாரிப்பான 'பிரமோஸ் சூப்பர்சோனிக்' ஏவுகணை சுமார் 2 ஆயிரம் கிலோ எடை கொண்டதாகும். இந்த ஏவுகணை 200 கிலோ வெடிப் பொருளுடன் சுமார் 290 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து சென்று தாக்கும் ஆற்றல் கொண்டது. நிர்ணயிக்கப்பட்ட பாதையில் செல்லும்போது, தேவைப்பட்டால் இலக்கிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் இலக்கின் போக்குக்கு ஏற்ப திசைமாறிச் சென்று தாக்கும் வல்லமை கொண்டது.

இந்தியா மற்றும் ரஷ்யா இணைந்து தயாரித்த இந்த ஏவுகணை 290 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும். மணிக்கு 3 ஆயிரத்து 700 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடியது. தரை, வான் மற்றும் கடலில் இருந்து இந்த ஏவுகணையை எதிரிகளை நோக்கி ஏவ முடியும்.
இதற்கு முன் பல முறை பிரமோஸ் ஏவுகணை சோதனை செய்யப்பட்டது. இந்நிலையில், பிரமோஸ் ஏவுகணையில், அவ்வப்போது புதுப்புது அம்சங்கள் சேர்க்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது போர் கப்பலை எதிர்க்கும் திறன் சோதிக்கப்பட்டது.
ஒடிசா மாநிலம் சண்டிப்பூரில் இந்தச் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, 'பிரமோஸ் சூப்பர்சோனிக்' ஏவுகணைக்கு போட்டியாக, சீனா 'சூப்பர்சோனிக் எச்டி-1' ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறது. இது, பிரமோஸ் ஏவுகணையை விட விலை மலிவானது என்றும், பாகிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இந்த ஏவுகணை விற்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
பாலைவனத்தில் பங்கர்கள்.. அணு ஆயுதங்களை டபுளாக்கும் சீனா! சாட்டிலைட் படங்களால் வெளிவந்த உண்மை! -
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications