உங்களில் யார் அடுத்த டாப் மாடல்... கேட்கிறார் லிசா ஹைடன்
பாலிவுட் திரை உலகில் புதிதாக வீசி வரும் கவர்ச்சிப்புயல் லிசா ஹைடன் புதிதாக எம்.டிவியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார். அது ‘இந்தியாவின் அடுத்த டாப் மாடல்கள்' யார் என்பதற்கான தேடல்தான். இந்த நிகழ்ச்சி இந்த மாதம் முதல் எம்.டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
ஒய்யார நடை நடந்து அழகழகாய் வந்து செல்லும் இந்த பெண்கள் மும்பை, அலகாபாத் நகரில் இருந்து வந்து போட்டியில் பங்கேற்றுள்ளனர். அனைவருமே 18 வயது முதல் 23 வயதிற்குட்பட்ட இளம்பெண்கள். பொறியாளர் பட்டம் பெற்று பணியில் இருப்பவர்களும், கல்லூரியில் படிக்கும் மாணவியும் மாடலிங் துறையின் மீதான காதலால் இந்த ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றுள்ளதாக கூறியுள்ளனர்.

தமிழ் டிவி சேனல்களில் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா? சூப்பர் சிங்கர், என ஆடல், பாடலுக்கான ரியாலிட்டி ஷோக்கள் நடத்தப்படுவதைப் போல எம்.டிவியில் சிறந்த மாடலுக்கான தேடல் வேட்டையை தொடங்கியுள்ளனர்.
இது அமெரிக்காவின் டாப் மாடல் யார் என்ற நிகழ்ச்சியை தழுவி எம்.டிவிக்கு ஏற்றார் போல வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரான லிசா ஹைடன் உடன், புகைப்படக்கலைஞர் தபூ ரத்னானி, எம்டிவி விஜே அனுஷா, நீரஜ் கபா ஆகியோரும் அழகான இந்திய மாடல்களை தேடி கண்டுபிடிக்க இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சி எம்.டிவியில் வரும் ஞாயிறு முதல் ஒளிபரப்பாக உள்ளது.
இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது பற்றி கருத்து கூறியுள்ள லிசா, 18 வயதில் மாடலிங் பணியை தொடங்கி இன்றைக்கு பாலிவுட் பட உலகில் நுழைந்துள்ளேன். மாடல் தொழில் என்பது சாதரணமாக போஸ் கொடுப்பது மட்டுமல்ல, அது ஒரு கிரியேட்டிவ் பணி. என்னுடைய பணியை நான் நேசிக்கிறேன் என்றும் கூறியுள்ளார் லிசா. தற்போது ஹவுஸ்ஃபுல் 3 படத்தில் லிசா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications