இஸ்ரேல் உதவியுடன் உருவான ஏவுகணை.. வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா

Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்: இஸ்ரேல் உதவியுடன் உருவாக்கப்பட்ட புதிய ஏவுகணையை இந்தியா இன்று ஒடிசா மாநிலத்தின் பாலசோர் கடற்கரையில் வெற்றிகரமாக பரிசோதித்தது.

ஒடிசா கடற்கரையில் உள்ள சந்திப்பூர் ஏவுதளத்தில் மொபைல் லாஞ்சர் மூலமாக ஏவுகணை ஏவப்படது. இந்த ஏவுகணை இலக்குகளை மிக துல்லியமாக தாக்கி அழித்ததாக ராணுவ மேம்பாட்டு ஆராய்ச்சி (டிஆர்டிஓ) அதிகாரிகள் தெரிவித்தனர்.

India successfully test-fired a new surface-to-air missile

50 முதல் 70 கி.மீட்டர் வரை சென்று இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணை தேவையான பரிசோதனைகள் முடிந்த பின்னர் மூன்று படைபிரிவுகளிலும் இணைத்துக்கொள்ளப்படும்.

முன்னதாக ஏவுகணை பரிசோதிக்கப்படும் போது பாதுகாப்பு நடவடிக்கையாக, ஏவுதளத்திற்கு அருகாமையில் உள்ள கிராம மக்களை அங்கிருந்து அதிகாரிகள் வெளியேற்றினர். அதேபோல், மீனவர்கள் கடலுக்குள் செல்லவும் அனுமதிக்கப்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+