அக்னி -1 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை
பாலசோர், ஒடிஷா: இந்தியா தனது அணு ஆயுத ஏவுகணையான அக்னி -1 ஏவுகணையை இன்று வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்த்தது.
700 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலக்கைத் தாக்கும் வல்லமை பெற்றது அக்னி-1 ஏவுகணை. இன்று ஒடிஷா மாநிலம் பாலசோரில் உள்ள ஏவுதளத்திலிருந்து இந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

ராணுவத்தின் சார்பில் இந்த சோதனை நடத்தப்பட்டது. தரையிலிருந்து தரையில் உள்ள இலக்கைத் தாக்கக் கூடிய இந்த அக்னி-1 ஏவுகணை, திட எரிபொருளால் இயங்கக் கூடியதாகும். நடமாடும் லாஞ்சரிலிரு்து இன்று காலை 9.15 மணிக்கு ஏவுகணை சோதனை செய்து பார்க்கப்பட்டது.
வீலர் தீவில் (தற்போது இதன் பெயர் அப்துல் கலாம் தீவு) உள்ள ஒருங்கிணைந்த ஏவுகணை செலுத்தும் தளத்தில் இச்சோதனை நடைபெற்றது.
சோதனை முழு. வெற்றி பெற்றதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தனது இலக்கை ஏவுகணை 9 நிமிடம் 36 விநாடிகளில் எட்டியதாக தெரிவிக்கப்பட்டது.
அக்னி-1 ஏவுகணை ஏற்கனவே ராணுவத்தில் சேர்க்கப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.
12 டன் எடை கொண்ட அக்னி -1 ஏவுகணை, 15 மீட்டர் நீளம் கொண்டது. ஒரு டன்னுக்கும மேற்பட்ட பேலோடை இதில் ஏற்றிச் செல்லமுடியும். பேலோடைக் குறைத்தால் இதன் தாக்குதல் தூரத்தை அதிகரிக்க முடியும்.
கடைசியாக 2015ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி அக்னி-1 ஏவுகணை பரிசோதிக்கப்பட்டது. அப்போதும் அந்த சோதனை வெற்றி பெற்றது நினைவிருக்கலாம்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications