பிருத்வி -2 ஏவுகணை சோதனை வெற்றி
சந்திப்பூர், ஒடிசா: இந்தியாவின் பிருத்வி - 2 ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் சந்திப்பூருக்கு அருகில், பிருத்வி -2 ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிருத்வி -2 ஏவுகணை 500 -1000 கிலோ எடையுள்ள அணு ஆயுதங்கள், வெடிபொருள்களைச் சுமந்து, 350 கிலோமீட்டர் தொலைவு வரை உள்ள தரை இலக்குகளை தாக்கும் திறன் படைத்தது.

இது குறித்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஒருங்கிணைந்த ஆய்வு மைய இயக்குநர் எம்.வி.கே.வி. பிரசாத் கூறுகையில், "காலை 9.20 மணிக்கு ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது' என்று தெரிவித்துள்ளார்.
2003 ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்க்கப்பட்ட இந்த ஏவுகணையை பயிற்சிக்காக அவ்வப்போது சோதனைச் செய்வது வழக்கம். அதன் ஒருபகுதியாகவே இன்று இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இன்றைய சோதனையின் போது பிருத்வி-2 ஏவுகணை திட்டமிட்டபடி, இலக்கை சரியாக தாக்கியதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடைசியாக பிருத்வி-2 ரக ஏவுகணை, கடந்த ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி சோதனை செய்யப்பட்டது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications