மேகி நூடுல்ஸ் ... விளம்பரத்தில் நடித்த அத்தனை நடிகர்கள் மீதும் நடவடிக்கை பாய்கிறது!
டெல்லி: மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்த கேள்விக்கு மத்திய அரசின் நுகர்வோர் விவகார துறை கூடுதல் செயலாளர் குருசரண் ஆம் என்று பதிலளித்துள்ளார்.
பிரபல நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான மேகி நூடுல்சில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிமான ரசாயனம் கலந்து இருப்பதை உத்தரபிரதேச மாநில உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அந்த மாநிலத்தில் பரபங்கி என்ற இடத்தில் உள்ள ஈசி டே ஸ்டோர் என்ற விற்பனை நிலையத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட மேகி நூடுல்சை பரிசோதனை செய்த போது இது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அந்த நூடுல்சுக்கு உத்தரபிரதேச அரசு தடை விதித்தது.

நடிகர்கள் மீது வழக்குப் பதிவு:
மேலும் மேகி நூடுல்ஸ் தொடர்பான விளம்பரங்களில் நடித்ததற்காக இந்தி நடிகர் அமிதாப்பச்சன், நடிகைகள் மாதுரி தீட்சித், பிரீத்தி ஜிந்தா உள்ளிட்டோர் மீது பரபங்கி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

வணிக நிறுவனங்களில் சோதனை:
உத்தரபிரதேசத்தில் லக்னோ, கன்னாஜ், மீரட் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள வணிக நிறுவனங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி மேகி நூடுல்சை பறிமுதல் செய்தனர்.

மாநில உணவு பாதுகாப்புத்துறை வழக்கு:
இது தொடர்பாக அந்த மாநில உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக அதிகாரி வி.கே.பாண்டே, பரபங்கி கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

நோட்டீஸ் அனுப்ப உத்தரவு:
அப்போது மேகி நூடுல்ஸ் விவகாரம் தொடர்பாக ஜூலை 1 ஆம் தேதி கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கோரி டெல்லி, உனாவில் உள்ள நெஸ்லே இந்தியா நிறுவனம், டெல்லியில் உள்ள ஈசி டே நிறுவனம், பரபங்கியில் உள்ள ஈசி டே விற்பனை பிரிவின் உரிமையாளர் மற்றும் மேலாளர் உள்பட 6 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

உரிய நடவடிக்கை நிச்சயம்:
டெல்லியில் நேற்று மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், "இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் மேகி நூடுல்ஸ் விவகாரத்தில் கவனம் செலுத்தி வருவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கும் என்றாலும் மேகி நூடுல்ஸ் பற்றி நுகர்வோரிடம் இருந்து நுகர்வோர் விவகார துறைக்கு புகார்கள் எதுவும் வரவில்லை" என்றும் அவர் கூறினார்.

தர நிர்ணய ஆணையம்:
இதுகுறித்து மத்திய நுகர்வோர் விவகார கூடுதல் செயலாளர் ஜி.குருசரண், "இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம், அனைத்து மாநிலங்களில் இருந்தும் மேகி நூடுல்சின் மாதிரிகளை ஆய்வுக்கு சேகரித்து இருக்கிறது.

மேகி நூடுல்ஸ் மாதிரிகள் ஆய்வு:
அவை பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. முழுமையான பரிசோதனை முடிவுகள் இன்னும் 2 அல்லது 3 தினங்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஏதாவது விதிமுறைகள் மீறப்பட்டு இருந்தால் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

கண்டிப்பாக நடவடிக்கை உண்டு:
மேகி நூடுல்ஸ் விளம்பர படங்களில் நடித்த நடிகர்-நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேட்டதற்கு, ‘‘ஆம். அந்த விளம்பரங்கள் நுகர்வோரை தவறாக வழிநடத்துவதாக இருந்தால் அவர்கள் அதற்கு பொறுப்பு ஆவார்கள்'' என்று பதில் அளித்தார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications