சட்டென கத்திய ரோஹித்! முகம் சுளித்த தலைகள்! வெட்ட வெளிச்சமான பிரச்சனை! இந்திய அணிக்கு பெரிய சிக்கல்?
கவுகாத்தி: நேற்று தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி 20 போட்டியில் இந்திய அணி வென்று இருந்தாலும் கூட சில முக்கியமான தவறுகளை இந்திய அணி நேற்று செய்தது.
நேற்று கவுகாத்தியில் இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான டி 20 போட்டி நடைபெற்றது. முதல் டி 20 போட்டியில் வென்ற இந்திய அணி இரண்டாவது டி 20 போட்டியில் அதே அணியுடன் களமிறங்கியது. இந்த நிலையில் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவருக்கு 237-3 ரன்கள் எடுத்தது.
இதில் சூர்யா குமார் யாதவ், ராகுல் ஆகியோர் அரை சதம் அடித்தனர். கோலி, ரோஹித் 40+ ரன்களை எடுத்தனர். அதன்பின் ஆடிய தென்னாபிரிக்க அணியும் அதிரடியாகவே ஆடியது.
மில்லர் சதம் காரணமாக 221-3 ரன்கள் வரை எடுத்து கடைசியில் போராடிதோல்வி அடைந்தது.

வெற்றி
நேற்று நடந்த இந்த மேட்சில் இந்திய அணி வெற்றிபெற்று இருந்தாலும் கூட இந்திய அணியின் பிரச்சனை ஒன்று வெட்டவெளிச்சமாக தெரிந்தது. அது இந்திய அணியின் மோசமான பவுலிங். 15 ஓவர்களை இந்திய அணி கொஞ்சம் நன்றாகவே வீசியது. ஆனால் கடைசி 5 ஓவர்களை மிக மோசமாக வீசியது. இந்திய அணி கடந்த சில போட்டிகளாகவே டெத் ஓவர்களில் மோசமாக சொதப்பி வருகிறது. அதாவது முதலில் பேட்டிங் செய்தால் இந்திய அணியால் டிபன்ட் செய்ய முடியவில்லை.

பும்ரா
பும்ரா இல்லாத காரணத்தால் கடைசி 5 ஓவர்களில் டிபன்ட் செய்வது கடினம் ஆகிவிடுகிறது. உதாரணமாக ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியில் பும்ரா இல்லை. இதனால் டிபன்ட் செய்ய வேண்டிய போட்டிகளில் எல்லாம் இந்திய அணி கடுமையாக திணறியது. இந்திய அணி ஆசிய கோப்பை தொடரில் தோல்வி அடையவே இந்த டெத் ஓவர் சொதப்பல்தான் காரணமாக இருந்தது.

டெத் ஓவர்
புவனேஷ்வர் குமார் ஆசிய கோப்பை தொடரில் டெத் ஓவர்களில் சரியாக பவுலிங் செய்யவில்லை. சரி அவர்தான் ஆடவில்லை என்றால் நேற்றும் கூட டெத் ஓவர்களில் ஹர்ஷல் பட்டேல், அக்சர் பட்டேல், சாகர் ஆகியோர் வீசியும் கூட இந்திய அணியால் சரியாக பவுலிங் செய்ய முடியவில்லை நேற்று டெத் ஓவர்களில் மட்டும் இந்திய அணி 78 ரங்களை கொடுத்தது. அந்த அளவிற்கு மோசமாக பவுலிங் அமைந்து இருந்தது. பும்ரா இல்லை என்றால் டெத் ஓவர்களில் இந்திய அணி சொதப்பிவிடும் என்ற நிலைதான் இப்போது வரை இந்திய அணியில் இருக்கிறது.

பவுலிங்
புவனேஷ்வர் குமார் இன்னும் பார்மிற்கு திரும்பாத நிலையில், இந்திய அணி டெத் ஓவர்களில் என்ன செய்ய போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. முக்கியமாக ஹர்ஷல் பட்டேல் டெத் ஓவர்களில் மிக மோசமாக சொதப்பி வருகிறார். ஆசிய கோப்பை தொடரிலும் அவர் மோசமாக ஆடியது குறிப்பிடத்தக்கது. நேற்று டெத் ஓவர்களில் ரோஹித் சர்மாவும் கோபமாக காணப்பட்டார். அடுத்தடுத்து சிக்ஸ் சென்றதும் பவுலர்களிடம் கத்த தொடங்கினார். மற்ற பீல்டர்களும் இதனால் முகம் சுளித்தனர்.

சரி செய்ய வேண்டும்
நேற்று இந்திய அணி 237 ரன்கள் என்று மிகப்பெரிய இலக்கை விதித்து இருந்தது. அது மட்டுமே இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. அது இல்லாமல் 20-30 ரன்கள் குறைவாக அடித்து இருந்தால் கண்டிப்பாக இந்திய அணி மோசமாக சொதப்பி இருக்கும். உலகக் கோப்பை டி 20 தொடருக்கு முன்பாக இந்திய அணி சரி செய்ய வேண்டிய விஷயம் என்றால் அது டெத் ஓவர்களில் டிபன்ட் செய்வது. அதை சரி செய்யாத பட்சத்தில் டி 20 உலகக் கோப்பையிலும் இந்திய அணி டெத் ஓவர்களில் திணறவே செய்யும்!












Click it and Unblock the Notifications