21 வருடங்களுக்கு பின் இந்தியாவிற்கு மிஸ் யுனிவர்ஸ் பட்டம்.. இளம் அழகி ஹர்னாஸ் கவுருக்கு மகுடம்!
ஜெருசலேம்: இந்தியாவை சேர்ந்த ஹர்னாஸ் கவுர் சந்துவிற்கு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது. 21 வருடங்களுக்கு பிறகு இந்தியாவிற்கு மீண்டும் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் கிடைத்துள்ளது.
பஞ்சாப்பை சேர்ந்த 21 வயதே ஆன இளம்பெண் ஹர்னாஸ் கவுர் பல்வேறு உலக நாட்டு அழகிகளுடன் போட்டி போட்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
மகுடம் வென்ற ஹர்னாஸ் கவு சந்துவிற்கு வெறும் 21 வயதே ஆகிறது. இதற்கு முன் இந்தப் பட்டத்தை வென்றவர்கள் சுஷ்மிதாசென் & லாரா தத்தா ஆகிய இருவரும் ஆவர்.

2000ம் ஆண்டு
இரண்டு பேரும் அதன்பின் பாலிவுட்டில் அறிமுகம் ஆகி சினிமா நட்சத்திரங்களாக வளர்ந்தது குறிப்பிடத்தக்கது. கடைசியாக லாரா தத்தா 2000ம் ஆண்டு இந்த பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது. 70வது மிஸ் யுனிவர்ஸ் பட்டத்திற்கான போட்டி இந்த முறை இஸ்ரேலில் இருக்கும் எலியாட்ஸ் பகுதியில் நடைபெற்றது.

ரன்னர் அப்
இதில் தென்னாபிரிக்கா, பெருகுவே ஆகிய நாடுகளின் அழகிகளுடன் நடைபெற்ற கடைசி கட்ட திரில் போட்டிகளுக்கு பின்பாக ஹர்னாஸ் கவு சந்துவிற்கு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வழங்கப்பட்டது. 2020ல் இதே பட்டத்தை வென்ற மெக்சிகோவை சேர்ந்த ஆண்ட்ரியா மெசா ஹர்னாஸ் கவுர் சந்துவிற்கு இந்த பட்டத்தை வழங்கினார்.

பஞ்சாப்
பஞ்சாப்பை சேர்ந்த இவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்புதான் மாடலிங் துறைக்கு வந்தார். 2017ல் பல்வேறு மெகாசைன்களிலும், மாடலின் நிகழ்ச்சிகளிலும் இவர் கலந்து கொண்டு படிப்படியாக இந்த இடத்தை அடைந்துள்ளார். தற்போது பொது நிர்வாகவியல் துறையில் இவர் மாஸ்டர் டிகிரி படித்து வருகிறார். இந்திய அளவில் நடைபெற்ற பல்வேறு அழகி போட்டிகளில் இவர் ஏற்கனவே விருதுகளை வாங்கி இருக்கிறார்.

பெமினா மிஸ்
பெமினா மிஸ் இந்தியா பஞ்சாப் 2019 விருதை வென்ற பின் இந்திய அளவில் கவனம் பெற்றார். இதையடுத்து இந்தியா சார்பாக இந்த வருடம் இஸ்ரேலில் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் கலந்து கொண்டு பட்டம் வென்றுள்ளார். ஏற்கனவே இவர் சில பஞ்சாபி படங்களில் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications