அமெரிக்கா தலைமையிலான சீனா எதிர்ப்பு கூட்டணியில் இந்தியா சேராது: சீன அரசுப் பத்திரிகை
டெல்லி: அமெரிக்கா தலைமையிலான சீனா எதிர்ப்புக் கூட்டணியில் இந்தியா சேர வாய்ப்பில்லை என்று அந்நாட்டின் அரசுப் பத்திரிகையான பீப்பிள்ஸ் டெய்லி வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டு வெற்றிப் பயணமாக பேசப்பட்டு வரும் நிலையில் சீனா அரசு நாளேட்டில் பரபரப்பான கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஜப்பான், ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் இணைந்த அமெரிக்கா தலைமையிலான சீனா எதிர்ப்புக் கூட்டணியில் இந்தியா சேராது என்பதற்கான 3 காரணங்களை அந்தக் கட்டுரை விவரித்துள்ளது.
சீனாவுக்கு எதிரான கூட்டணி
ஆசிய-பசிபிக் பகுதிகளில் அமெரிக்கா தனது ராணுவ பலத்தை அதிகரிக்க ஜப்பான், ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை கூட்டணி சேர்த்துள்ளது. இது பெரும்பாலும் சீனாவுக்கு எதிரான போக்கே என்று கூறியுள்ள அந்தக் கட்டுரை, இந்தியா அணி சேரா நாடு என்ற பண்பாட்டில் வளர்ந்து வருவது எனவே இந்தியா ஒரு போதும் சீனா எதிர்ப்பு அமெரிக்க வியூகத்தில் இணையாது என்று கூறுகிறது அந்த கட்டுரை.
சீனாவுடன் நட்புறவு
"இந்தியா பன்முக அயல்நாட்டுக் கொள்கையை அனுசரிப்பது, ஆகவே இந்தியா அமெரிக்காவுடனான உறவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறதோ அதே அளவு சீனாவுடனான உறவுகளுக்கும் சம முக்கியத்துவம் அளிக்கும்" என்று அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
எல்லை விவகாரம்
இருநாடுகளுக்கு இடையிலான ‘தீர்க்கப்படாத எல்லைப் பிரச்சினைகள்' இருந்தாலும் இந்திய-சீன உறவுகள் பெரிய அளவில் பாதிக்கப்படாது என்கிறது அந்தக் கட்டுரை.
டிரான்ஸ் பசிபிக்
ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் ஜப்பான், அமெரிக்கா, நியூசிலாந்து, கனடா, பெரூ, சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய நாடுகளின் கூட்டுறவுடன் அமைக்கப்பட்ட 'டிரான்ஸ்-பசிபிக் கூட்டுறவு' சீனாவின் பொருளாதார வளர்ச்சியைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகும். இந்தக் கூட்டணி அமைக்கப்படுவதில் இந்தியா பரிசீலிக்கப்படவில்லை.
பொருளாதார வளர்ச்சிதான்..
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணம் பெரும்பாலும் இந்திய பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொண்டதே என்றும் அந்தக் கட்டுரை தெரிவிக்கிறது.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications