ராஜஸ்தானில் மீண்டும் வெடித்து சிதறிய மிக் -21 விமானம்.. பாராசூட் மூலம் தப்பிய பைலட்!
ராஜஸ்தானில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் -21 விமானம் விபத்துக்குள்ளாகி உள்ளது.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் -21 விமானம் வெடித்து சிதறி விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விபத்தில் விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
சமீப காலமாக இந்தியாவில் விமான படைக்கு சொந்தமான விமானங்கள் வெடித்து சிதறுவது வழக்கமாகி வருகிறது. தொடர்ச்சியாக இது போல நிறைய விபத்து நடந்து வருகிறது.

அந்த வகையில் இன்று ராஜஸ்தான் அருகே ஜோத்பூர் சிரோஹி என்று பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்து இருக்கிறது. எஞ்சினில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்து இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.
மிக் -21 ரக விமானம் இப்படி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. விமானம் கட்டுப்பாட்டை இழந்த நொடியில் விமானி துரிதமாக செயல்பட்டு பாராசூட் மூலம் தப்பித்தார்.
இதனால் அவர் உடலில் லேசான காயங்களுடன் தப்பித்தார். தற்போது இந்திய விமானப்படை அதிகாரிகளும், போலீசாரும் அங்கு சோதனை செய்து வருகிறார்கள்.
இது இதே வருடத்தில் நடக்கும் மூன்றாவது விபத்தாகும். சில நாட்களுக்கு முன் பெங்களூரில் இந்திய விமானப்படை விமானங்கள் 2 நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளானது.
இந்த விபத்து காரணமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. அதன்பின் ராஜஸ்தானில் இதேபோல் மிக் -21 ரக விமானம் இப்படி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. தற்போது மீண்டும் மிக 21 விபத்திற்கு உள்ளாகி உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications