மியான்மரில் இந்திய விமானப் படை சிக்னல்களை நடுவானில் வழிமறித்து சைபர் அட்டாக்- சீனாவின் சேட்டைதானே?
டெல்லி: நிலநடுக்க பேரழிவால் உருக்குலைந்த மியான்மர் நாட்டில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள இந்திய விமானப் படை விமானத்தின் சிக்னல்கள் மீது நடுவானில் சைபர் அட்டாக் நடத்தப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்திய விமானப் படை விமானம் நடுவானில் பறந்த போது, சிக்னல்கள் மீது சைபர் அட்டாக் நடத்தி பொய்யான தகவல்களை வழங்கியதை உரிய நேரத்தில் விமானிகள் கண்டு உஷாரானதால் விபரீதங்கள் நிகழவில்லை எனவும் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நமது அண்டை நாடான மியான்மரில் கடந்த மாதம் இறுதியில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் மியான்மர் நாட்டையே உருக்குலைத்தது. அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்கள் மியான்மரில் பேரழிவை ஏற்படுத்தின. இந்த நிலநடுக்க பேரழிவில் சுமார் 5,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

இதனையடுத்து உலகிலேயே முதல் நாடாக நமது நாடுதான் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் களமிறங்கி பணியாற்றி வருகிறது. ஆபரேஷன் பிரம்மா என்ற பெயரில் நமது நாட்டின் பாதுகாப்புப் படையினர் அதிநவீன கருவிகளுடன் மியான்மர் நிலநடுக்க மீட்புப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மற்றொரு அண்டை நாடான சீனா, கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், மியான்மரில் மீட்புப் பணியில் ஈடுபட்ட நமது இந்திய விமானப் படையினரின் சிக்னல்களை நடுவானில் வழிமறித்து சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த சைபர் தாக்குதல்கள் மூலம் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானிகளுக்கு பொய்யான தகவல்கள் கிடைக்க தொடங்கின. இதனால் குழப்பமடைந்த விமானிகள், அவசர கால சிக்னல்களை பயன்படுத்தி நிஜ தகவல்களை பெற்றனர். இதன் மூலம் நடுவானில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதலையும் நமது பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.
இந்திய விமானப் படையினரை திசைதிருப்பும் வகையிலான இந்த சைபர் தாக்குதலை சீனாதான் செய்திருக்க முடியும் என்கின்றனர் பாதுகாப்புத் துறை வலலுநர்கள். இது தொடர்பாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணையும் நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications