For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மற்றொரு சர்ஜிக்கல் ஸ்டிரைக்: மியான்மர் எல்லைக்குள் புகுந்து தீவிரவாதிகளை வேட்டையாடிய இந்திய ராணுவம்!

மியான்மர் எல்லையில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் நடத்திய அதிரடித் தாக்குதலில் நாகா தீவிரவாதிகள் ஏராளமானோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: மியான்மர் எல்லையில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் நடத்திய அதிரடித் தாக்குதலில் நாகா தீவிரவாதிகள் ஏராளமானோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய - மியான்மர் எல்லையில் தீவிரவாதிகள் முகாம் அமைத்து தங்கியிருப்பதாக இந்திய ராணுவத்திற்கு அதிகாலை 4.45 மணிக்கு உளவுத்துறை தகவல் கிடைத்தது. இதையடுத்து மியான்மர் எல்லைக்குள் நுழைந்த இந்திய ராணுவத்தினர் தேசிய சோஷியலிச நாகாலந்து கவுன்சிலைச் சேர்ந்த இயக்கத்தினரின் முகாம்கள் மீது அதிரடித் தாக்குதல் நடத்தினர்.

Indian army conducts again a surgical strike but in Myanmer

70 வீரர்களை கொண்ட இந்தியப் படை தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலின் போது இந்திய வீரர்கள் தரப்பில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிகிறது.

இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் எண்ணிக்கை குறித்த தகவல் முழுமையாக கிடைக்கவில்லை.

கடந்த ஆண்டு இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்து 'சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்' எனும் தீவிரவாத முகாம் அழிப்பு நடவடிக்கைகளை நடத்தியது. அதேபோன்ற ஒரு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கை இந்திய ராணுவம் இன்று அரங்கேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
The Indian Army has carried out a major operation along the Indo-Myanmar border. The attack was carried out against the cadres of the NSCN-K, Army officials said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X