ஒன்றிரண்டு எண்ணத் தெரியாத மாப்பிளை..... அதிரடியாக திருமணத்தை நிறுத்திய குஷ்பு
உ.பி: ஆக்ரா அருகே உள்ள கிராமம் உள்ள ஒன்றில் நடைபெறவிருந்த திருமணத்தில், பத்து வரை சரியாக எண்ணத் தெரியாத மக்கு மாப்பிளையை உதறித்தள்ளி மணமகள் திருமணத்தை நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ராவுக்கு அருகில் அமைந்துள்ள கிராமம் குலாரியபுர். இக்கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகிருஷ்ணா பாபு சக்சேனா. இவரது மகள் குஷ்பு. இவருக்கும் ஒரிய மாவட்டத்தைச் சேர்ந்த ஓம்வீர்க்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த திங்கள்கிழமை திருமணம் நடைபெற இருந்த நிலையில், மணமேடையில் ஐயர் ஓதிய மந்திரத்தை தப்பும் தவறுமாக உளறி உள்ளார் மாப்பிள்ளை ஓம்வீர், இதனை மணமகள் குஷ்புவிடம் அவரது தோழிகள் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து மணமேடைக்கு வந்த குஷ்பு, மாப்பிள்ளை ஓம்வீரிடம் சில ஒரு ரூபாய் நாணயங்களை கொடுத்து எண்ணுமாறு கூறியுள்ளார். ஒன்று, இரண்டு, மூன்று என எண்ண ஆரம்பித்த அவருக்கு ஒன்பதுக்கு அப்புறம் எண்ண தெரியவில்லை. ஓம்வீருக்கு மறுபடியும் ஒரு வாய்ப்பு கொடுத்த குஷ்பு. ஒம்வீர் மொபைலில் இருந்து தன் மொபைலுக்கு நம்பரை அழுத்தி கால் செய்யுமாறு கூறினார். ஓம்வீர் ஒன்றும் புரியாமல் திருதிருவென முழிக்க உடனடியாக திருமணத்தை நிறுத்தினார் குஷ்பு. ஒம்வீர் பெற்றோர்கள் குஷ்புவை எவ்வளவோ சமாதானப்படுத்த முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை.இதையடுத்து விஷயம் பஞ்சாயத்து வரை சென்றது.
ஒம்வீர் படிக்காத காரணத்தினால், மாப்பிள்ளை பார்க்க சென்றபோது ஓம்வீரிடம் பேசுவதற்கு அவரது குடும்பத்தினர் தடை விதித்தது பின்னர் தெரியவந்தது. எட்டாம் வகுப்பு படித்துவிட்டு , மேற்கொண்டு ஆசிரியர் பயிற்சி படிக்க குஷ்பு எண்ணியிருந்த நிலையில் தான் அவருக்கு இந்த திருமண ஏற்பாடு நடந்தது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications