உலக்கோப்பையை வென்ற ஜூனியர்களுக்கு சீனியர்கள் வாழ்த்து!
உலகக்கோப்பையை வென்ற இந்திய ஜூனியர் அணிக்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video

டெல்லி: உலகக்கோப்பையை வென்ற இந்திய ஜூனியர் அணிக்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நியூஸிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது.
8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி நான்காவது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது. கோப்பையை வென்ற இந்திய ஜூனியர் அணிக்கு கிரிக்கெட்டி வீரர்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்,
|
விராட் கோஹ்லி வாழ்த்து
இதுதொடர்பாக இந்தியின் கேப்டன் விராட் கோஹ்லி பதிவிட்டுள்ள டிவிட்டில் என்ன ஒரு வெற்றி யு19 பசங்களுக்கு.. இதை ஒரு படிக்கல்லாக எடுத்துக்கொண்ட நீண்ட தூரம் செல்ல வேண்டும்... இந்த நேரத்தை கொண்டாடங்கள் என தெரிவித்துள்ளார்.
|
அஷ்வின் டிவிட்
அஷ்வின் பதிவிட்டுள்ள டிவிட்டில் ஐசிசி ஜூனியர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார். தொடர் முழுவதும் அவர்கள் இரக்கமற்ற மற்றும் தொழில்முறை வீரர்களாக இருந்தனர் என்றும் இது ஒரு பெருமிதமான உணர்வு என்றும் குழு மற்றும் ஆதரவு ஊழியர்களுக்கு வாழ்த்து என்றும் அஷ்வின் தெரிவித்துள்ளார்.
|
ரோஹித் புகழாரம்
ரோஹித் ஷர்மா பதிவிட்டுள்ள டிவிட்டில் ஜூனியர் உலகக்கோப்பையை தூக்கியதற்காக மொத்த யூனிட்டுக்கும் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். தொடர் முழுவதும் மிகவும் இந்திய அணி அதிக்கம் செலுத்தியதாக தெரிவித்துள்ளார்.
|
ஆச்சரியமில்லை
யுவராஜ் சிங் பதிவிட்டுள்ள டிவிட்டில் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ஏராளமான வாழ்த்துக்கள்! பெரிய டீம் வொர்க் என்றும்.. ராகுல் டிராவிட் இருக்கும் போது சாம்பியனாவதில் ஆச்சரியமில்லை என்றும் யுவராஜ் தனது டிவிட்டில் பதிவிட்டுள்ளார்.
|
ரவிசாஸ்திரி
ரவிசாஸ்திரி பதிவிட்டுள்ள வாழ்த்தில் சிறந்த பர்ஃபார்மன்ஸ் பாய்ஸ் என தெரிவித்துள்ளார். நீங்கள் ஒரு நாட்டின் வழிகளிலும் முன்னேறி இருந்தீர்கள். இந்த கணத்தை கொண்டாடுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
|
பும்ரா வாழ்த்து
ஜஸ்பிரித் பும்ரா ஜூனியர் உலகக்கோப்பை போட்டியில் வென்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். இறுதிப்போட்டியில் அதிக்கத்துடன் விளையாடியதாக தெரிவித்துள்ளது. பெருமிதம் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications