பெற்றோரிடமிருந்து பிரிக்க நினைத்தால் மனைவியை விவாகரத்து செய்யலாம் - சுப்ரீம் கோர்ட்
டெல்லி: வயது முதிர்ந்த பெற்றோரிடம் இருந்து பிரிக்க முயலும் மனைவியை இந்து மதத்தை பின்பற்றும் கணவர் விவாகரத்து செய்ய சட்டத்தில் இடமுண்டு என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவைச் சேர்ந்த தம்பதியின் விவகாரத்து மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் நேற்று விசாரித்தது. இந்த வழக்கில் மனுதாரரை அவரது மனைவி பெற்றோரை பிரிந்து வருமாறும் இல்லை என்றால் தற்கொலை செய்துக்கொள்ளப்போவதாக அச்சுறுத்தியிருக்கிறார். ஒருமுறை தற்கொலைக்கு முயலும்போது கடைசி நொடியில் காப்பாற்றப்பட்டிருக்கிறார். இத்தகைய சூழல் கணவனுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கை விசாரித்து நீதிபதிகள் ஏ.ஆர்.தவே, எல்.நாகேஸ்வர ராவ் அடங்கிய அமர்வு "வயது முதிர்ந்த பெற்றோரிடம் இருந்து பிரிக்க முயலும் மனைவியை இந்து மதத்தை பின்பற்றும் கணவர் விவாகரத்து செய்ய சட்டத்தில் இடமிருக்கிறது. இந்திய நாட்டில் இந்து மதத்தை பின்பற்றும் ஒரு ஆண் அவரது தாய் தந்தையைவிட்டு பிரிந்து வாழ்வது என்பது கலாச்சாரத்துக்கு எதிரானது. அதுவும் பெற்றோர் சம்பாதிக்க முடியாத நிலையில் இருக்கும்போது மகன் அவர்களை பிரிந்து செல்லவே கூடாது.
திருமணத்துக்கு பின்னர் மனைவி கணவரின் குடும்பத்தினருடன் வாழவேண்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எனவே உரிய வலுவான காரணம் இல்லாமல் கணவர் பெற்றோரைப் பிரிந்து தன்னுடன் தனிக்குடித்தனத்துக்கு வரவேண்டும் என மனைவி எதிர்பார்க்கக் கூடாது' என கருத்து தெரிவித்தனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications