ரோஹித் வெமுலா தற்கொலையும் ஊடகங்களில் "தலித்"துகள் நிலையும்
டெல்லி: ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் நிகழ்த்தப்பட்டு வரும் ஜாதிய ரீதியான ஒடுக்குமுறைகள் குறித்து ஆங்கில ஊடகங்கள் கவனம் செலுத்தாததும் தலித் ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலாவின் தற்கொலைக்கு ஒரு காரணமாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
ரோஹித் வெமுலாவின் தற்கொலையைத் தொடர்ந்து நடைபெற்று வரும் மாணவர் கிளர்ச்சிகளுக்கும் கூட மிகப் பெரிய அளவில் ஊடகங்களால் முன்னுரிமை கொடுக்கப்படவில்லை. அதற்கு ஊடகங்களில் தலித் சமூகத்தினர் பெரிய பதவிகளில் இல்லாததும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளேட்டின் அசோசியேட் எடிட்டர் பிரஷாந்த் ஜா ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் ஆங்கில ஊடகங்களில் "தலித்" சமூக பத்திரிகையாளர்களின் நிலை தொடர்பாக இடம்பெற்றுள்ள சில விவரங்கள்:
- 1996ஆம் ஆண்டு "தலித் பத்திரிகையாளர்களைத் தேடி" என்ற தலைப்பில் பத்திரிகையாளர் பி.என். உனியால் ஒரு கட்டுரை வெளியிட்டார். அதில் கடந்த 30 ஆண்டுகளாக ஊடகங்களில் ஒரே ஒரு தலித் பத்திரிகையாளரைக் கூட சந்திக்க முடியவில்லை என பதிவு செய்யப்பட்டுள்ளது.
- மத்திய அரசின் செய்தி மற்றும் தகவல் பிரிவான பி.ஐ.பி. கொடுத்துள்ள அடையாள அட்டை விவரங்கள் அடிப்படையில் தேடியபோது இந்தியாவின் பிரதான ஆங்கில பத்திரிகைகளில் ஒரு தலித் பத்திரிகையாளரைக் கூட காண முடியாததாக இருந்தது.
- 10 ஆண்டுகளுக்குப் பின்னர் 2006ஆம் ஆண்டு சமூக அறிவியலாளர் யோகேந்திர யாதவ் மற்றும் மீடியா ஸ்டடி குரூப்பின் அனில் சமதியா ஒரு சர்வே நடத்தினர்.
- தொலைக்காட்சிகள் உள்பட மொத்தம் 37 முன்னணி ஊடகங்கள் இந்த சர்வேக்குட்படுத்தப்பட்டன.
- 37 முன்னணி ஊடகங்களில் டாப் 10 பதவிகளில் ஒரு தலித் பத்திரிகையாளர் கூட இடம்பெற்றிருக்கவில்லை.
- மீடியா ஸ்காலர் ராபின் ஜெஃப்ரி இந்தியாவின் பிராந்திய மொழி பத்திரிகைகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டார்.
- இந்தியாவின் 20 நகரங்களில் 250க்கும் மேற்பட்டோரிடம் ஜெஃப்ரி நேர்காணல் நடத்தினார்.
- இது பற்றி குறிப்பிடுகிற ஜெஃப்ரி, தாம் ஒரு தலித் பத்திரிகையாளரை கூட சந்தித்தது இல்லை என்கிறார்.
- இந்தியாவின் முன்னணி தேசிய பத்திரிகை, டிவி சேனல்களில் எடிட்டராக ஒரு தலித்தோ பழங்குடியினத்தவரோ இல்லை என்கிறார் மீடியா ஸ்டடி குரூப்பின் அனில் சமதியா.
இப்படியான நிலை இருக்கும்போது தலித்துகள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகளை ஒரு தேசிய அளவிலான விவாதமாக எப்படி கொண்டு செல்ல இயலும் என்ற கேள்வியையும் இந்த கட்டுரை முன்வைக்கிறது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications