மகனின் இறுதிச்சடங்கு: இந்தியா வந்து சேர்ந்தார் கப்பல் கேப்டன் சுனில்

இந்திய கப்பலான எம்.வி. ஓஷன் சென்ச்சுரியனின் கேப்டன், மும்பையைச் சேர்ந்த 38 வயது சுனில் ஜேம்ஸ். அவரது மனைவி அதிதி. சுனில் கடந்த ஜூலை மாதம் 16ம் தேதி நைஜீரியா அருகே உள்ள லாகோஸில் கப்பலில் சென்று கொண்டிருக்கையில் அதை கடற்கொள்ளையர்கள் தாக்கினர்.
இதையடுத்து ஜூலை 30ம் தேதி இந்த சம்பவம் குறித்த விசாரணைக்காக மேற்கு ஆப்பிரிக்காவின் டோகோ நாட்டின் தலைநகர் லோமில் கப்பலை நிறுத்திவிட்டு வந்த சுனில் அந்நாட்டு கடலோரக் காவல்படையால் கைது செய்யப்பட்டார்.
கடற்கொள்ளையர்களுக்கு உதவியதாக சுனில் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவருடன் விஜயன் என்ற மாலுமியும் கைது செய்யப்பட்டார். குற்றம் செய்யாத சுனில் ஜேம்ஸை டோகோ நாட்டு சிறையில் இருந்து மீட்குமாறு அவரது குடும்பத்தார் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் , சோதனை மேல் சொதனையாக சிறையில் இருந்த சுனிலின் 11 மாத ஆண்குழந்தை கடந்த 2ம் தேதி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தது. தனது பிள்ளைக்கு இறுதிச் சடங்குகளை செய்ய தனது கணவர் நிச்சயம் வருவார் என்ற நம்பிக்கையில் அதிதி குழந்தையின் உடலை மருத்துவமனையில் உள்ள பிண அறையில் பாதுகாத்து வைத்திருந்தார்.
கிட்டத்தட்ட 6 மாதங்களாக சிறையில் வாடிய கேப்டன் சுனில் மற்றும் விஜயன் என்ற மாலுமி மத்திய அரசின் தலையீட்டால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விடுதலை செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இன்று காலை டெல்லி வந்து சேர்ந்தார் சுனில். விரைவில் குழந்தைக்கான இறுதிச் சடக்குகள் செய்யப் படும் எனத் தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications