டெல்லி: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தலைவர் கைது
டெல்லி: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தலைவர் தாசீன் அக்தரை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
லோக்சபா தேர்தலை சீர்குலைப்பதற்கான சதியில் தீவிரவாதிகள் ஈடுபடக்கூடும் என்ற அச்சுறுத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாகிஸ்தானை சேர்ந்த இந்திய முஜாஹிதீன் தீவிரவாதி வக்காஸ்(எ) ஜியாவுர் ரஹ்மான் உள்பட 5 பேரை நாட்டின் பல்வேறு புலனாய்வு அமைப்பினரின் உதவியுடன் டெல்லி போலீசார் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
2010-ம் ஆண்டில் நிகழ்ந்த ஜம்மா மசூதி துப்பாக்கிச் சூடு, வாரணாசி குண்டு வெடிப்பு, 2011-ல் நிகழ்ந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு, 2012-ல் புனே குண்டு வெடிப்பு, கடந்த ஆண்டு ஐதராபாத்தில் நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பு போன்ற தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் ஆவர்.
மேலும், அஜ்மீர் ரயில் நிலையத்தில் ஜியா உர் ரகுமானும், பாகிஸ்தானை சேர்ந்த ஜியா, ஜெய்ப்பூரை சேர்ந்த முகமது மெஹ்ரூப், முகமதுவகார் அசார் என்ற ஹனீப், ஜோத்பூரில் சாகிப் அன்சாரி ஆகிய தீவிரவாதிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மீது தாக்குதல் நடத்தவும், எதிர்வரும் நாடாளுமன்ற லோக்சபா தேர்தலை சீர்குலைக்கவும் அவர்கள் திட்டம் தீட்டி வந்தது தெரிய வந்தது.
இந்நிலையில், இந்தியன் முஜாகீதின் தீவிரவாத அமைப்பின் தலைவரான தீவிவாதி தாசீன் அக்தாரை டெல்லி சிறப்பு படை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர். பீகார் மாநிலத்தின் இந்தோ-நேபாள் எல்லையில் வைத்து தாசீன் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியன் முஜாகீதின் அமைப்பின் தலைவராக செயல்பட்ட யாசின் பத்கல் கைது செய்யப்பட்டதை அடுத்து அந்த அமைப்பின் தற்போதையை தலைவராக தாசீன் அக்தார் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
தாசீன், இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டு வெடிப்புக்கு மூளையாக செயல்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தானில் 4 தீவிரவாதிகள் கைது செய்யப்படுவதற்கு முன்னதாகவே தாசீன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரகசிய இடத்தில் வைத்து உளவுத்துறை அதிகாரிகள் தாசீனிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications