மின்சாரம் "கம்" டீசல் என்ஜின்கள் - இந்தியாவிலேயே தயாரிக்க ரயில்வே துறை முடிவு
டெல்லி: மின்சாரம் மற்றும் டீசலில் இயங்கும் ரயில் என்ஜின்களை இந்தியாவிலேயே தயாரிக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
இந்திய ரயில்வே துறையில் தற்போது 52 சதவீதம் டீசல் என்ஜின்கள் பயன்படுத்தப்படுகிறது. ரயில்களின் வேகத்தை அதிகப்படுத்தி, பயண நேரத்தை குறைக்க டீசல் என்ஜின்கள் படிப்படியாக மின்சார என்ஜின்களாக மாற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் டீசல் மற்றும் மின்சாரத்தில் இயங்கக்கூடிய வகையில் ஒரே என்ஜினை இந்தியாவில் முதன் முறையாக தயாரிக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.

இது குறித்து ரயில்வே அமைச்சக அதிகாரிகள், "அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் தற்போது டீசல் மற்றும் மின்சாரத்தில் இயங்கக்கூடிய வகையில் ஒரே என்ஜின் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. எனவே இந்தியாவிலும் இந்த வகை என்ஜின்களை தயாரிக்க ரயில்வே துறை முடிவு செய்து இருக்கிறது.
இதற்கான திட்டம் குறித்த பரிந்துரை ரயில்வே வடிவமைப்பு ஆய்வுத்துறைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இத்திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்தால் வாரணாசியில் 4,500 குதிரை திறன் கொண்ட 5 என்ஜின்கள் தயாரிக்கப்படும். இந்த வகை என்ஜினை தயாரிக்க ரூபாய் 18 கோடி செலவு ஆகும்.
இந்த என்ஜின் தயாரிக்கப்பட்டவுடன் மின்சார என்ஜின் ரயில்கள் செல்லும் பாதையில் சோதனை ஓட்டம் நடத்தப்படும். டீசல் எஞ்ஜினை விட அதிக எடையுள்ள இந்த என்ஜின் ரயில் அதிகபட்சமாக மணிக்கு 135 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் என எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications