இன்றும் அடிதான்.. வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு சரிந்த ரூபாய் மதிப்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய ரூபாயின் மதிப்பு வியாழக்கிழமையான இன்று, வரலாற்றிலேயே அதிக பட்சமாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று மதியம் 12.40 மணியளவில் 72.08 என்ற அளவில் இருந்தது.

Indian Rupee breaches 72 a dollar for first time

புதன்கிழமை வர்த்தக முடிவு நேரத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 71.76 என்ற அளவில் இருந்தது. அதை ஒப்பிட்டால் இன்று 0.40% அளவுக்கு ரூபாய் மதிப்பு சரிவை சந்தித்துள்ளது.

தொடர்ந்து ஏழாவது நாளாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சீனாவிலிருந்து அந்த நாட்டுக்கு இறக்குமதியாகும் பொருட்களின் மீது கூடுதலாக 200 டாலர் பில்லியன் அளவுக்கு வரிகளை உயர்த்த திட்டமிட்டு உள்ளார். இந்த வரி உயர்வு அமலுக்கு வரும் போது இந்திய ரூபாயின் மதிப்பு இன்னும் சரிவடைய வாய்ப்பு உள்ளது.

சீன இறக்குமதி மீதான ட்ரம்ப் அரசின் வரி கூட்டு நடவடிக்கைகளால், கடந்த மூன்று மாதங்களில் சீனாவின் பணமான, யுவான் 6 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

அதே நேரம் மத்திய, நிதியமைச்சர் அருண் ஜேட்லி இந்த விவகாரங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், நிலைமை சீரடையும் என்றும் தெரிவித்து வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+