எல்லையில் பாகிஸ்தான் படை தொடர்ந்து துப்பாக்கிச்சூடு - இந்திய வீரர்கள் 2 பேர் பலி
ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய வீரர்கள் 2 பேர் வீரமரணமடைந்தனர்.
காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணா காதி பகுதியில் உள்ள இந்திய முகாம்கள் மீது பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர்.
இந்தியஎல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
காலை 7 மணி முதல் எல்லைக்கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள சலோட்ரி மற்றும் சக்ரா முகாம்கள் மீது பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர்.

இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் கொல்லப்பட்டனர். 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். 4க்கும் மேற்பட்ட முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியப் படையினரும் தக்க பதிலடி கொடுப்பதால் அப்பகுதி முழுவதும் துப்பாக்கி குண்டுகளின் முழக்கமாக உள்ளது. பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இரு ராணுவத்துக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையால் அங்கு பதற்றம் நீடிக்கிறது.
கடந்த 2 வாரங்களில் மட்டும் பாகிஸ்தான் படையினரின் கண்மூடித்தனமான தாக்குதலில் இந்திய வீரர்கள் 8 பேர் பலியாகியுள்ளனர்.
இதேபோன்று அத்துமீறி 60 முறைக்கும் மேலாக பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி இந்திய ராணுவம் சர்ஜ்ஜிக்கல் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications