ஆண்-பெண் சரிவிகிதம் மோசமாக உள்ள மாநிலங்களில் பெண் எம்.எல்.ஏ.க்கள் அதிகம்
பாட்னா: ஆண், பெண் சரிவிகிதம் மோசமாக உள்ள மாநிலங்களில் தான் அதிக அளவில் பெண்கள் எம்.எல்.ஏ.க்களாக உள்ளது தெரிய வந்துள்ளது.
மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் தேர்தல் ஆணைய தகவலின்படி ஆண், பெண் சரிவிகிதம் மோசமாக உள்ள மாநிலங்களில் தான் பெண் எம்.எல்.ஏ.க்கள் அதிகமாக உள்ளது தெரிய வந்துள்ளது.
பெண் எம்.எல்.ஏ.க்கள் அதிக அளவில் உள்ள 5 மாநிலங்களில் ஆண், பெண் சரிவிகதம் மிகவும் மோசமாக உள்ளது.

கல்வி
பெண் எம்.எல்.ஏ.க்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் பெண்களின் எழுத்தறிவு விகிதம் தேசிய விகிதத்தை விட 64.4 சதவிகிதம் குறைவாக உள்ளது.

பஞ்சாப்
ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய வட மாநிலங்களில் ஆண்-பெண் சரிவிகிதம் மிகவும் மோசமாக இருந்தாலும் பெண்களின் எழுத்தறிவு விகிதம் தேசிய விகிதத்தை விட அதிகமாக உள்ளது.

பீகார்
2000ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு பீகாரில் பெண் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2000ம் ஆண்டு பீகார் சட்டசபையில் 5.9 சதவிகித பெண் எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். ஆனால் 2010ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு அந்த எண்ணிக்கை 14 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

தேர்தல்
2000ம் ஆண்டுக்கு பிறகு பீகார் மாநிலத்தில் தேர்தலில் போட்டியிடும் பெண்களின் எண்ணிக்கை 62 சதவிகிதம் அதிகரித்துள்ளது. பீகாரில் உள்ள 34 தொகுதிகளில் பெண்கள் எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர்.

பெண்கள்
பீகாரின் வடக்குப் பகுதியில் தான் பெண் எம்.எல்.ஏ.க்கள் அதிக அளவில் உள்ளனர். பெண் எம்.எல்.ஏ.க்கள் அதிகம் உள்ள இந்த பகுதிகளில் ஆண், பெண் சரிவிகிதம் மிகவும் மோசமாக இருப்பதுடன் பெண்களின் எழுத்தறிவு விகிதமும் குறைவாக உள்ளது.

குறைவு
இந்தியாவிலேயே பீகாரில் தான் எழுத்தறிவு விகிதம் குறைவு ஆகும். அங்கு எழுத்தறிவு விகிதம் 63.5 சதவிகிதமாக உள்ளது. மேலும் பெண்களின் எழுத்தறிவு விகிதம் 53 சதவிகிதமாக உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications