ஈராக்கில் பிணையக் கைதிகளாக இருக்கும் இந்தியர்கள் உயிருடன் உள்ளனர்: சுஷ்மா ஸ்வராஜ்
டெல்லி: ஈராக்கில் தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் இந்தியர்கள் அனைவரும் உயிருடன் இருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
ஈராக்கின் மொசுல் நகரில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 40 பேரை தீவிரவாதிகள் பிணையக் கைதிகளாக பிடித்தனர். அவர்கள் இன்று வரை தீவிரவாதிகளின் பிடியில் தான் உள்ளனர். இந்நிலையில் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து அண்மையில் சிறுவன் ஒருவர் தப்பித்து வந்துள்ளார். தீவிரவாதிகளியின் பிடியில் இருந்த அனைத்து இந்தியர்களும் கொலை செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் லோக்சபாவில் கேள்வி நேரத்தின்போது மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறுகையில்,
ஈராக்கில் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள அனைத்து இந்தியர்களும் இறந்துவிட்டார்கள் என்பதை நான் நம்பவில்லை. அந்த சிறுவன் கூறியதை நான் நம்பியிருந்தால் அவர்கள் எல்லாம் இறந்துவிட்டார்கள் என்று நான் இங்கு தெரிவித்திருப்பேன். ஆனால் அந்த சிறுவனின் பேச்சை நான் நம்பவில்லை. அதனால் பிணையக் கைதிகளை தேடி வருகிறோம்.
அண்மையில் நான் அரபு நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பங்கேற்றேன். அப்போது அந்த இந்தியர்கள் உயிரோடு இருப்பதாக இரண்டு முக்கிய நாடுகளின் அமைச்சர்கள் தெரிவித்தனர். அவர்களை மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வரத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
பிணையக் கைதிகள் அனைவரும் ஏழைக் குடும்பங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications