இந்தியாவில் பெயரே இல்லாமல் இயங்கும் ஒரே ரயில் நிலையம் எது தெரியுமா? சுவாரசிய பின்னணி
ராய்நகர்: இந்தியாவில் உள்ள 7000+ ரயில் நிலையங்களுக்கும் அதிகாரப்பூர்வமாக ரயில்வே துறை சார்பில் பெயர் ஒதுக்கப்பட்டு இருக்கும். ஆனால், நமது நாட்டில் ஒரு ரயில் நிலையம் மட்டும் எந்தவொரு பெயரும் இல்லாமல் இயங்கி வருகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.. அந்த ரயில் நிலையம் எங்கு உள்ளது? அது ஏன் இப்படி பெயரே இல்லாமல் இயங்குகிறது? என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நமது நாட்டில் ரயில்வே தான் மிக முக்கியமான போக்குவரத்து முறையாக இருக்கிறது. நாட்டின் பெரும்பாலான நகரங்களுக்கு கனெக்ஷன் இருப்பதால் மக்கள் ரயில்களில் செல்லவே விரும்புகிறார்கள்.

ரயில் நிலையம்:
இதனால் ரயில் போக்குவரத்து என்பது நாட்டில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இப்போது நமது நாடு முழுக்க மொத்தம் 7112 ரயில் நிலையங்கள் உள்ளன. நம்ம சென்னையிலேயே சென்ட்ரல் தொடங்கி எழும்பூர், தாம்பரம், கிண்டி எனப் பல ரயில் நிலையங்கள் உள்ளன. இதில் ஒரு ரயில் நிலையத்தை மற்றொன்றில் இருந்து தனித்துக் காட்டுவது அதன் பெயர் தான்.
அதிகாரப்பூர்வமாக ஒவ்வொரு ரயில் நிலையத்திற்கும் ஒவ்வொரு பெயர் தரப்பட்டு இருக்கும். அதை வைத்து ஒரு ரயில் நிலையம் அடையாளப்படுத்தப்படும். உதாரணமாகச் சென்னை சென்ட்ரலின் அதிகாரப்பூர்வ பெயர் Puratchi Thalaivar Dr. M.G. Ramachandran Central Railway Station (MAS). எழும்பூரின் அதிகாரப்பூர்வ பெயர் Chennai Egmore (MS).
பெயர் இல்லாத ரயில் நிலையம்:
இப்படி நாடு முழுக்க உள்ள 7112 ரயில் நிலையங்களுக்கும் தனித்தனியாக ஒரு பெயர் இருக்கும். ஆனால், நாட்டிலேயே ஒரே ஒரு ரயில் நிலையத்திற்கு மட்டும் அதிகாரப்பூர்வமாக எந்தவொரு பெயரும் இல்லை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.. ரயில்வே சார்பில் ஒதுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ பெயர் இல்லாமலேயே இந்த ரயில் நிலையம் இத்தனை காலமாகச் செயல்பட்டு வருகிறது.
இதுவே நாட்டின் மற்ற ரயில் நிலையங்களில் இருந்து இந்த ரயில்வே ஸ்டேஷனை மட்டும் தனித்துக் காட்டுகிறது. பெயரின்றி இயங்கும் இந்த ரயில் நிலையம் ஒடிசா மாநிலத்தில் ரெய்னா மற்றும் ராய்நகர் கிராமங்களுக்கு இடையே பங்குரா-மாசகிராம் ரயில் பாதையில் அமைந்துள்ளது. அது எப்படி பெயர் இல்லாமல் இருக்கும் எதாவது ஒரு பெயரை ரயில்வே கொடுத்து இருக்குமா என்ற கேள்வி உங்களுக்கு வரலாம்.
மோதல்:
ஆம், ரயில்வே சார்பில் இதற்கு ஒரு பெயர் ஒதுக்கப்பட்டது. ஆனால், ரெய்னா மற்றும் ராய்நகர் கிராமங்களுக்கு இடையில் ரயில் நிலையம் அமைந்துள்ளதால் இரு கிராம மக்களுமே தங்கள் ஊரின் பெயரை ரயில் நிலையத்திற்கு வைக்க வேண்டும் என வலியுறுத்தினர். இது தொடர்பாக இரு கிராமங்களுக்கும் இடையே மோதல் கூட ஏற்பட்டது.
இதன் காரணமாக ரயில்வே நிலையத்திற்குப் பெயரே இல்லாமல் போய்விட்டது. வழக்கமாக ரயில் நிலையங்களின் தொடக்கத்திலும் முடிவிலும் மஞ்சள் நிற போர்டில் அதிகாரப்பூர்வ பெயர் எழுதப்பட்டு இருக்கும். ஆனால், இங்கு அவை காலி மஞ்சள் போர்டாகவே இருக்கிறது. ரெய்நகர் மற்றும் ரெய்னா கிராமங்களுக்கு இடையேயான மோதலால் பெயர் இல்லாமலேயே இந்த ரயில் நிலையம் இயங்கி வருகிறது.
தினசரி 6 முறை நின்று செல்லும்:
இந்த ரூட்டில் பங்குரா- மாசகிராம் இடையே இயக்கப்படும் ஒரே ஒரு ரயில் மட்டுமே செல்லும். இது தினசரி ஆறு முறைப் பெயர் இல்லாத இந்த ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது.. இங்குப் புதிதாக யாராவது வந்தால் பெயர் இல்லாததைப் பார்த்துக் குழம்பிவிட வாய்ப்புகள் அதிகம். உள்ளூர்வாசிகளிடம் விசாரித்த பிறகே சரியான இடத்திற்குத் தான் வந்துள்ளோம் என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.
ரயில்வே சொல்வது என்ன:
இது தொடர்பாக ரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டர் நபகுமார் நந்தி கூறுகையில், "ரயில்வே சார்பில் ஒரு பெயர் ஒதுக்கப்பட்டது. இருப்பினும், அதை எதிர்த்து உள்ளூர்வாசிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இப்போது ரயில் நிலையத்திற்குப் பெயரிடும் விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. நீதிபதி உத்தரவின் அடிப்படையில் முடிவெடுக்கப்படும்" என்றார்.
ரயில்வே சார்பில் தொடக்கத்தில் இந்த ரயில் நிலையத்திற்கு ராய்நகர் என்ற பெயர் வைக்கப்பட்டது. இதற்கு ரெய்னா ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்ததாலேயே இந்த ரயில் நிலையம் பெயர் இல்லாமல் இயங்கி வருகிறது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications