ஏர்போர்ட்டில் பயணியை அடித்து குரல்வளையை நெரித்த இன்டிகோ ஊழியர்கள்: அதிர்ச்சி வீடியோ
Recommended Video

டெல்லி: டெல்லி விமான நிலையத்தில் பயணி ஒருவரை இன்டிகோ ஏர்லைன்ஸ் ஊழியர்கள் தாக்கியபோது எடுத்த வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்தில் பயணி ராஜீவ் கத்யால்(53) என்பவரை இன்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள் அடித்து கீழே தள்ளி குரல்வளையை நெரிக்கும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து ராஜீவ் டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது,
விமானத்தில் வந்திறங்கிய நான் பேருந்துக்காக காத்திருந்தேன். விமான நிழலில் நின்று கொண்டிருந்த என்னை இன்டிகோ ஊழியர் ஒருவர் தள்ளிப் போய் நிற்குமாறு திட்டினார். திட்டுவதற்கு பதில் பேருந்துக்கு ஏற்பாடு செய்யலாமே என்று நான் கூறினேன். என்ன செய்வது என்று நீங்கள் ஒன்றும் சொல்லித் தர வேண்டாம் என்றார் அவர்.
பேருந்து வந்தபோது அதில் ஏறவிடாமல் தடுத்தனர். இவனுக்கு பாடம் கற்பிப்போம் என்று கூறி என்னை அடித்து கீழே தள்ளி கழுத்தை நெரித்தனர் என்றார்.
இந்த சம்பவம் குறித்து இன்டிகோ நிறுவனம் ராஜீவிடம் மன்னிப்பு கேட்டதுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications