பாலியல் வன்கொடுமை செய்து...தண்டவாளத்தில் வீசினார்கள்..போலீசில் பொய் புகார் கொடுத்த கல்லூரி மாணவி!

Subscribe to Oneindia Tamil

இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் ஒரு கும்பல் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் ரெயில் தண்டவாளத்தில் வீசியதாக போலீசில் பொய் புகார் கொடுத்தார்.

விசாரணையின் போது அந்த மாணவியின் கூற்றுக்கள் ஆதாரமற்றவை மற்றும் முரண்பாடானவை என்பதும் அவர் கொடுத்தது பொய் புகார் என்றும் போலீசார் கண்டறிந்தனர்.

பொய் புகார் கொடுத்த மாணவி மீது 182/211 பிரிவு கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

பாலியல் வன்கொடுமை புகார்

பாலியல் வன்கொடுமை புகார்

மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள போலீஸ் நிலையத்தில் 19 வயதான கல்லூரி மாணவி ஒரு புகார் கொடுத்தார். புகாரில் அவர் கூறியிருப்பதாவது:- என்னுடைய முன்னாள் காதலன், நந்திகிராமில் உள்ள ஒரு வீட்டிற்கு என்னை அழைத்து சென்றான். அங்கு முன்னாள் காதலனும், அவரது நண்பர்களும் சேர்ந்து என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர்.

ஆதாரம் இல்லை

ஆதாரம் இல்லை

மேலும் கத்தியால் குத்தி, ஒரு சாக்கில் கட்டிப்போட்டு அருகிலுள்ள ரயில் தண்டவாளத்தில் வீசிச் சென்றனர். நான் தப்பித்து வந்து விட்டேன் என்று புகாரில் கூறியிருந்தார் அவர். இது தொடர்பாக இந்தூர் போலீசார் கடத்தல், கற்பழிப்பு, கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் நடைபெற்றதற்கான எந்த ஆதாரமும் போலீசாருக்கு கிடைக்கவில்லை.

மாணவி பொய் புகார்

மாணவி பொய் புகார்

இதனை தொடந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த மாணவி பொய் புகார் கொடுத்தது போலீசாருக்கு தெரியவந்தது. இது தொடர்பாக இந்தூர் போலீஸ் ஐ.ஜி.பி ஹரிநாராயண் சாரி மிஸ்ரா நிருபர்களிடம் கூறியதாவது:- கல்லூரி மாணவி கொடுத்த புகாரின்பேரில் 150 க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி.யின் காட்சிகள் சோதனை செய்யப்பட்ட்டது.

மாணவி மீது வழக்குப்பதிவு செய்யப்படும்

மாணவி மீது வழக்குப்பதிவு செய்யப்படும்

பர்தேசிபுரத்திலிருந்து பங்கங்கா வரையிலான ரெயில் தண்டவாள பகுதிகளில் தடயவியல் சான்றுகள் சேகரிக்கப்பட்டன. இந்த பாலியல் வன்கொடுமை நடந்ததாக எந்த ஆதாரமும் இல்லை. விசாரணையின் போது அந்த மாணவியின் கூற்றுக்கள் ஆதாரமற்றவை மற்றும் முரண்பாடானவை, அவர் கொடுத்தது பொய் புகார் என்று போலீசார் கண்டறிந்தனர், அந்த மாணவி மீது 182/211 பிரிவு கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+