"என்ன கருமம்டா இது!" நூடுல்ஸை பான் மசாலா உடன் கலந்தடிக்கும் இளைஞர்.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்

Subscribe to Oneindia Tamil

இந்தூர்: மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் வித்தியமான உணவு குறித்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

ஃபாஸ்ட் புட்கள் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்தாலும் கூட, இந்த காலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்ப உணவாக நூடுல்ஸ் தான் இருக்கிறது.

ஏற்கனவே ஆபத்தானதாக இருக்கும் நூடுல்ஸில் மேலும் ஆபத்தைச் சேர்த்தால் என்னவாகும்? அது போன்ற ஒரு வீடியோ தான் இணையத்தில் இப்போது டிரெண்டிங்கில் உள்ளது.

 நூடுல்ஸ் பான் மசாலா

நூடுல்ஸ் பான் மசாலா

இணையதளங்களில் நடைபெறும் வித்தியாசமான உணவு போட்டிகளில் உங்களைத் தனித்துக் காட்ட எவ்வளவு தூரம் செல்ல முடியும்? இப்போது இணையத்தைப் பார்ப்பவர்களுக்கு இதற்கு எல்லையே இல்லை என்றே கூற தோன்றும். இந்தூரைச் சேர்ந்த ரோஹித் சௌஹான் என்ற இளைஞர், தனது விருப்பமான உணவு எனக் கூறி நூடுல்ஸ் உடன் பான் மசாலாவை கலக்கிச் சாப்பிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 அதிர்ச்சி

அதிர்ச்சி

இந்த வீடியோ வெறும் சில நாட்களில் 30 லட்சம் பேரால் இந்த வீடியோ பார்க்கப்பட்டுள்ளது. பான் மாசாலா காரணமாகப் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளதால் அதை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் என்ற பலரும் வலியுறுத்தி வரும் நிலையில், இந்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. அதில் பான் மசாலா கலந்த நூடுல்ஸை ரோஹித் சௌஹான் ரசித்து ருசித்து உண்பதும் தெளிவாகத் தெரிகிறது.

 வீடியோ

வீடியோ

உங்களுக்கு பிடித்த வித்தியமான உணவு என்ற தலைப்பில் இணையத்தில் போட்டி நடைபெற்று உள்ளது போல! அந்த வீடியோவில் தான் ரோஹித் சௌஹான் இப்படியொரு வித்தியாசமான முயற்சியை எடுத்துள்ளார். இந்த வீடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த உடனேயே, இது இணையத்தில் உடனடியாக டிரெண்டிங் லிஸ்டில் சென்று சேர்ந்துவிட்டது.

 முதல்முறை இல்லை

முதல்முறை இல்லை

இருப்பினும், இது போல நூடுல்ஸில் பான்மசாலா மிக்ஸ் செய்து சாப்பிடுவது இது முதல்முறை இல்லை.ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இதேபோல நூடுல்ஸில் பான்மசாலா மிக்ஸ் செய்து சாப்பிடும் வீடியோ ஒன்று பலராலும் பகிரப்பட்டது. இருப்பினும், உணவு போட்டி ஒன்றிலேயே இதுபோன்ற பான் மசாலா-நுடுல்ஸ் மிக்ஸிங் வீடியோ பதிவிடப்படுவது இதுவே முதல்முறையாகும்.

 விமர்சனம்

விமர்சனம்

இருப்பினும், இதற்கு இணையத்தில் நெட்டிசன்கள் பலரும் கடும் எதிர்ப்பே தெரிவித்து இருந்தனர். பான் மசாலா கேன்சரை ஏற்படுத்தும் என்பது பல்வேறு ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் கூட பான் மசாலா நிறுவனங்களின் விளம்பரங்களுக்கு பாலிவுட் பிரபலங்கள் நடிப்பது குறித்து பெரும் விமர்சனங்கள் எழுந்தன. இந்தச் சூழலில் பான் மாசாலா- நூடுல்ஸ் வீடியோ மீண்டும் விவாதத்தைக் கிளப்பி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+