ஷீனாவின் இறந்த உடலை சீவி சிங்காரித்து, லிப்ஸ்டிக் பூசி, சென்ட் அடித்து எரித்த இந்திராணி!
மும்பை: வாகனச் சோதனையின் போது போலீசாரின் கண்களில் மண்ணைத் தூவுவதற்காக இந்திராணி, கொலை செய்யப்பட்ட ஷீனா போராவின் உடலுக்கு மேக்கப் போட்டு, காரில் அமர வைத்து கொண்டு சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பெற்ற மகளையே கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார் பிரபல தனியார் தொலைக்காட்சியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் முகர்ஜியின் இரண்டாவது மனைவி இந்திராணி. இவர் தனது முதல் கணவர் சித்தார்த் தாஸ் மூலம் பிறந்த மகள் ஷீனா போராவை கடந்த 2012ம் ஆண்டு கொலை செய்தார்.
இதற்கு இந்திராணியின் இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னா மற்றும் கார் டிரைவர் ஷாம் ராய் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு இச்சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மேக்கப்...
முறையற்ற காதலால் ஷீனா போரா கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கொலை செய்யப்பட்ட ஷீனாவை எரிப்பதற்காக காரில் வைத்து கொண்டு சென்றுள்ளார் இந்திராணி. அப்போது, இடையில் வாகனச் சோதனையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்படாமல் இருக்க, ஷீனாவின் உடலுக்கு அவர் மேக்கப் போட்டுள்ளார்.

தலைவாரி, லிப்ஸ்டிக் போட்டு...
ஷீனாவிற்கு தலை வாரி, லிப்ஸ்டிக் போட்டு விட்டு, அவரது உடலுக்கு பெர்ப்யூமும் போட்டுள்ளார் இந்திராணி. காரின் பின் இருக்கையில் அமர்ந்து, துவண்டு, தொங்கிக் கொண்டிருந்த ஷீனாவின் தலையை தனது தோளின் மீது சாத்திக் கொண்டு சென்றுள்ளார். போலீஸ் விசாரணையில் இந்தத் தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.

உடல்நலம் சரியில்லை...
அப்படி ஏதேனும் நடந்தால், ஷீனாவுக்கு உடல்நலம் சரியில்லை, அதனால் தூங்கிக் கொண்டிருக்கிறார் எனக் கூறவும் இந்திராணி திட்டமிட்டிருந்ததாக தெரிகிறது.

போலீஸ் விசாரணையில்...
அதன்பிறகுதான், ஷீனா போராவின் உடல் பெட்ரோல் ஊற்றி, எரிக்கப்பட்டு, தனிமையான காட்டுப்பகுதியில் வீசப்பட்டுள்ளது. இதனை மூன்று பேரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளதாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications