துணிக் கடை திறப்பு விழாவுக்கு வராமல் ரூ 29 லட்சம் பெற்றதாக மோசடி புகார்.. சன்னி லியோனிடம் விசாரணை!
கொச்சி: கொச்சியில் துணிக் கடை திறப்பு விழாவுக்கு வருவதாக கூறி ரூ 29 லட்சம் மோசடி செய்ததாக பாலிவுட் நடிகை சன்னி லியோன் மீது போலீஸார் விசாரணை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன். இவர் மம்முட்டி நடித்து வரும் மலையாள படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். படங்களில் நடிப்பதுடன் இவர் பல்வேறு கடைத் திறப்பு விழாக்களிலும் கலந்து கொள்கிறார்.
அது போல் திருவனந்தபுரத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் ஒரு கடையை திறக்க வந்த போது அந்த இடத்தில் அவரை காண லட்சக்கணக்கானோர் குவிந்ததால் பரபரப்பு எழுந்தது.

ட்விட்டர்
கொச்சியில் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளார்கள். கொச்சியில் ஒரு கடைத் திறப்பு விழாவுக்கு அவர் வந்த போது அவரை காண அண்டைய மாவட்ட மக்களும் குவிந்தனர். அப்போது We Love Sunny Leone என உற்சாகமாக முழங்கினர். இதை பார்க்க சன்னி, ஆனந்தக் கண்ணீரில் மிதந்து சென்றார். இந்த சம்பவத்தை சன்னி தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவு செய்திருந்தார்.

கணவர், குழந்தைகள்
இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் சன்னி கேரளாவுக்கு வருகை தந்திருந்தார். இதையடுத்து எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூரைச் சேர்ந்த ஷியாஸ் என்ற இளைஞர் கேரளா டிஜிபியிடம் ஒரு புகார் தெரிவித்திருந்தார். அதில் நடிகை சன்னி லியோன் கொச்சியில் துணிக் கடை திறப்பு விழாவுக்கு வருவதாக கூறினார்.

ஷியாஸ்
இதற்காக அவருக்கு ரூ 29 லட்சம் பணம் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் கூறிய நாளில் விழாவுக்கு கடை திறப்பு விழாவுக்கு வரவில்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னிடம் வாங்கிய பணத்தை பெற்று தர வேண்டும் என கோரி ஷியாஸ் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

உத்தரவு
இதையடுத்து சன்னியிடம் விசாரணை நடத்துமாறு கேரளா டிஜிபி கொச்சி குற்றப்பிரிவு போலீஸுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து சன்னி லியோனிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications