‛‛வாவ்’’.. அயோத்தி ராமரின் ஆபரணங்களை கவனிச்சீங்களா! சிறப்பம்சமே இதுதான்.. மிரள வைக்கும் பின்னணி
அயோத்தி: உத்தரப் பிரதேசத்தில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இந்நிலையில், பால ராமர் சிலைக்கு அணிவிக்கப்பட்டுள்ள ஆபரணங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராமர் பிறந்ததாக நம்பப்படும் அயோத்தியில் அவருக்கான கோயிலை கட்ட கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில், 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள் என பிரமாண்டமாக ரூ.1,100 கோடியில் பாரம்பரிய நாகரா பாணியில் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோயிலின் பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில், நேற்று பால ராமர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டது.

ராமரின் சிலையின் பீடம் 3 அடி உயரத்தைக் கொண்டது. இச்சிலை மக்ரானா மாா்பிள் கற்களால் செய்யப்பட்டு, அதன் மீது தங்கக் கவசம் பொருத்தப்பட்டுள்ளது. ராமர் சிலையை பிரதிஷ்டை செய்த பிரதமர் நரேந்திர மோடி, 'இது மிகவும் உணர்ச்சிகரமான தருணம்' என்று கூறியுள்ளார்.
கும்பாபிஷேகத்தை நேரலையில் கண்டுகளிக்க நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கோயில்களில் எல்இடி திரை அமைக்கப்பட்டு நேரலை செய்யப்பட்டது. பாஜக ஆளும் மாநிலங்களில் நேற்று பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தினந்தோறும் சுமார் 3 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ராமர் சிலைக்கு அணிவிக்கப்பட்ட ஆபரணங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆபரணங்கள் அனைத்தும் அத்யாத்மா ராமாயணம், வால்மீகி ராமாயணம், ராமசரிதமானஸ் மற்றும் ஆளவந்தார் ஸ்தோத்திரம் போன்ற நூல்களை ஆய்வு செய்து அதில் உள்ள குறிப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என கோயில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. அங்கூர் ஆனந்தின் லக்னோவைச் சேர்ந்த ஹர்சஹைமல் ஷியாம்லால் ஜூவல்லர்ஸ் மூலம் இந்த ஆபரணங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல பால ராமர் சிலைக்கு அணிவிக்கப்பட்டுள்ள மஞ்சள் நிற வேட்டி மற்றும் சிவப்பு நிற அங்கவஸ்திரம் பனாரஸ் பட்டால் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதில் தூய தங்க 'ஜரிகை' பயன்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த டெக்ஸ்டைல் டிசைனர் மணீஷ் திரிபாதி என்பவரால் இந்த ஆடை வடிவமைக்கப்பட்டிருக்கிறது என அறக்கட்டளை கூறியுள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications