இன்போசிஸ் பிபிஓ விற்பனைப் பிரிவு தலைவர் கார்த்திக் ஜெயராமன் ராஜினாமா

இன்போசிஸிலிருந்து விலகிய அவர் அக்சஞ்சர் நிறுவனத்தில் சேர்ந்துள்ளார்.
கடந்த 2006ம் ஆண்டு அமெரிக்க பிரிவு இன்போசிஸிஸ் கிளையில் பணியில் சேர்ந்தார் கார்த்திக். பின்னர் மெல்போர்ன் நகரில் இருந்தபடி செயல்பட்டு வந்தார்.
தற்போது அவர் மெல்போர்னில் உள்ள அக்சஞ்சர் அலுவலகத்தில் பணியில் சேர்ந்து விட்டார்.
அக்சஞ்சர் நிறுவனத்தில் அவர் நிர்வாக இயக்குநராக சேர்ந்திருப்பதாக தனது லிங்க்ட்இன் பக்கத்தில் தெரிவித்துள்ளார் கார்த்திக்.
இந்தியாவின் 2வது மிகப் பெரிய சாப்ட்வேர் சேவை நிறுவனமான இன்போசிஸிலிருந்து கடந்த சில மாதங்களாகவே உயர் அதிகாரிகள் தொடர்ந்து விலகி வருகின்றனர்.
இந்த மாதத் தொடக்கத்தில் லத்தீன் அமெரிக்காவுக்கான பிபிஓ சேவை பிரிவு தலைவர் ஹம்பர்டோ அன்ட்ரடே விலகினார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவுக்கான நிறுவன செயல்பாட்டுப் பிரிவுத் தலைவர் அசோக் வெமுரி விலகினார். அதேபோல இன்போசிஸ் துணைத் தலைவரும், நிதிச் சேவை பிரிவு தலைவருமான சுதிர் சதுர்வேதியும் விலகினார்.
ஜூலையில், இன்போசிஸ் குளோபல் சேல்ஸ் பிரிவு தலைவர் பாசப் பிரதான விலகுவதாக அறிவித்தார்.












Click it and Unblock the Notifications