மாட்டிறைச்சி விருந்து கொடுத்த காஷ்மீர் சுயேட்சை எம்.எல்.ஏ. மீது டெல்லியில் மைவீசி தாக்குதல்!!
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் மாட்டிறைச்சி விருந்து கொடுத்த சுயேட்சை எம்.எல்.ஏ. ரஷீத் மீது டெல்லியில் இந்து சேனா அமைப்பினர் மை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜம்மு காஷ்மீரில் மாட்டிறைச்சி விற்பனைக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க அறிவுறுத்தியது.

இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் சுயேட்சை எம்.எல்.ஏ. ரஷீத், மாட்டிறைச்சி விருந்து கொடுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் அவர் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில் நேற்று டெல்லிக்கு வந்த காஷ்மீர் எம்.எல்.ஏ. ரஷீத் மீது மை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இத் தாக்குதலுக்கு இந்து சேனா அமைப்பு பொறுப்பேற்று உள்ளது.
இச் சம்பவம் குறித்து எம்.எல்.ஏ. ரஷீத் கூறுகையில், மும்பையில் சுதீந்தரா குல்கர்னி மீது நடந்த தாக்குதல் போன்று என் மீதும் மைவீச்சு சம்பவம் நடந்து உள்ளது. இந்தியாவில் என்ன? நடக்கிறது என்பதை உலகமே பார்க்கிறது என்றார்.
இச்சம்பவம் தொடர்பாக இந்து சேனா அமைப்பைச் சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
