ட்விஸ்ட்.. முதல்வன் பட பாணியில்.. குஜராத் முதல்வர் வேட்பாளர் ஆன "இசுடான் காட்வி".. அசத்திய ஆம் ஆத்மி

Subscribe to Oneindia Tamil

அஹமதாபாத்: குஜராத் மாநில சட்டசபை தேர்தல்: ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளராக இசுடான் காட்வி அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. குஜராத்தில் செய்தியாளராகவும், நிகழ்ச்சி நெறியாளராகவும் இவர் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விடிவி என்ற செய்தி நிறுவனத்தில் இவர் மஹாமந்தன் என்ற நிகழ்ச்சியை தொகுதி வழங்கி வந்தார். இது செய்தி மற்றும் விவாதம் செய்யும் நிகழ்ச்சி ஆகும்.

இந்த நிகழ்ச்சி மூலம் குஜராத் மக்கள் இடையே மிகப்பெரிய அளவில் இவர் பிரபலம் அடைந்தார். மக்கள் இடையே மிகப்பெரிய அளவில் இந்த நிகழ்ச்சி வரவேற்பு பெற்றதால், நிகழ்ச்சி நேரம் கூடுதலாக நீட்டிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

குஜராத்

குஜராத்

குஜராத்தில் டிஆர்பி அதிகம் உள்ள நிகழ்ச்சிகளில் இந்த நிகழ்ச்சி முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பிரபலம் அடைந்த இசுடான் காட்வி ஆம் ஆத்மி கட்சியுடன் கடந்த சில காலமாக நெருக்கமாக இருந்தார். முக்கியமாக தனது நிகழ்ச்சிகளில் பாஜகவினரை கடுமையாக கேள்வி எழுப்பி வந்தார். பாஜகவை கடுமையாக கேள்வி எழுப்பி வந்த இசுடான் காட்வி கடந்த வருடம் ஜூலை 14ம் தேதி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.

ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி

அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் சென்று இருந்த போது அவர் முன்னிலையில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். கட்சியில் இணைந்த சில நாட்களிலேயே தேசிய இணை பொதுச்செயலர் பதவி இவருக்கு வழங்கப்பட்டது. அப்போதே இவர் அக்கட்சியின் குஜராத் மாநில தலைவர் அல்லது முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. கட்சியில் இணைந்த பின் தொலைக்காட்சியில் தோன்றுவதை குறைத்துக்கொண்டு இவர் மக்களை அதிக அளவில் நேரில் சந்தித்தார்.

சர்வே

சர்வே

இதற்காக அவர் 1 லட்சம் கிலோ மீட்டர் தூரம் குஜராத்தில் பயணம் மேற்கொண்டதாக கூறியுள்ளார். மக்கள் பலரை சந்தித்து அவர்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்தார். இதற்காக கட்சி சார்பாக குஜராத்தில் ஆம் ஆத்மி ஒரு சர்வே நடத்தியது. இந்த சர்வேவில் இசுடான் காட்விக்கு ஆதரவாக 75 சதவிகித வாக்குகள் விழுந்தன. இதில் பெரும்பான்மை பெற்றதால் அவருக்கு கட்சியில் முதல்வர் வேட்பாளர் வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.

இசுடான் காட்வி

இசுடான் காட்வி

முன்னதாக பஞ்சாப்பில் பகவத் சிங் மன் இப்படித்தான் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு உட்கட்சி சர்வேயில் அதிக ஆதரவு கொடுக்கப்பட்டது. அதை போலவே இசுடான் காட்வி தற்போது தேர்வாகி உள்ளார். பகவத் சிங் மன் காமெடியனாக டிவிகளில் தோன்றி பிரபலம் அடைந்தார். பின்னர் அவரை மக்கள் ஏற்றுக்கொண்டனர். தற்போது அதேபோல் இசுடான் காட்விவை ஆம் ஆத்மி இறக்கி உள்ளது. தமிழில் முதல்வன் படத்தில் செய்தி தொகுப்பாளர் முதல்வர் ஆவது போல.. இவரை ஆம் ஆத்மி முன்னிறுத்த தொடங்கி உள்ளது.

தேர்தல் எப்போது

தேர்தல் எப்போது

முதல்வன் ரீ மேக் ஆன ஹிந்தி நாயக் படத்தை வைத்து இசுடான் காட்வியை ஆம் ஆத்மி ப்ரொமோட் செய்து வருகிறது. நேற்றுதான் குஜராத் மாநில சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி 2 கட்டமாக டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அங்கு வாக்குகள் எண்ணப்பட்டு டிசம்பர் 8-ஆம் தேதி தேர்வு முடிவு வெளியிடப்படும் என்றும் தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

குஜராத் சட்டசபை தேர்தலுக்கு வாக்களிக்க 4 கோடியே 90 லட்சம் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். நவம்பர் 15-ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களை திரும்ப பெற நவம்பர் 17-ஆம் தேதி கடைசி நாள் என்று தேர்தல் ஆணையம் கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+